ஐபிஎல் 2025.. 2 அணிகளின் பார்டியை கெடுக்க போகும் சிஎஸ்கே.. இது நடந்தால் ஒட்டுமொத்த தொடரும் காலி

ஐபிஎல் 2025-ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவியதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு கிடைக்காமல் போய்விட்டது.

- Advertisement -

இன்னும் மூன்று வாரங்கள் உள்ள நிலையில் சிஎஸ்கே அணி முதல் அணியாக வெளியேறிவிட்டது. இந்த தருணத்தில் சிஎஸ்கே தற்போது நினைத்தால் இரண்டு அணிகளுக்கு வாழ்க்கை கொடுக்க முடியும். இல்லையென்றால் இரண்டு அணிகளின் கதையை முடித்து விட முடியும். இதனால் சிஎஸ்கே அணி மற்ற அணிகளுக்கு வில்லனாக மாறப் போகிறது.

கொல்கத்தா அணிக்கு ஆபத்து:

குறிப்பாக சிஎஸ்கே அணியை போல் இரண்டு அணிகளும் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இருக்கிறது. அதில் ஒன்று புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியும் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியும் ஆகும். இந்த இரண்டு அணிகளுமே இனி எஞ்சியிருக்கும் போட்டிகளில் வெற்றியைப் பெற வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருக்கிறது.

இந்த தருணத்தில் கொல்கத்தா அணியை சிஎஸ்கே வருமே ஏழாம் தேதி நடைபெறுகிறது. இதில் ஈடன் கார்டன் மைதானத்தில் சிஎஸ்கே அணி கே கே ஆர் ஐ எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் கொல்கத்தா அணியில் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்படும்.

- Advertisement -

வில்லனாகும் சிஎஸ்கே:

இதேபோன்று வரும் 12ஆம் தேதி சென்னையில் ராஜஸ்தான் அணியை சிஎஸ்கே அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுவிட்டால் ராஜஸ்தான் அணியின் கதை முடிந்துவிடும். இதேபோன்று குஜராத் அணிக்கும் பிளே ஆப் வாய்ப்பு அல்லது முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் நிலை ஏற்படலாம்.

இதையும் படிங்க: எங்களுக்கு மாற்று வீரரே கிடைக்கல.. இதுக்கு முக்கிய காரணம் பாகிஸ்தான்தான் – ரிக்கி பாண்டிங் பேச்சு

அப்போது சிஎஸ்கே அணி தங்களது கடைசியில் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அது குஜராத்தை பாதிக்கும். அதுமட்டுமில்லாமல் ஆர் சி பி அணி தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், சிஎஸ்கே அணிக்கு எதிரான வரும் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் தோல்வியை தழுவினால் அதுவும் அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

- Advertisement -
Published by
Tags: CSKIpl 2025

Recent Posts