ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் இன்று குஜராத் அணிக்கு எதிராக விளையாடுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை விட்டு ஏற்கனவே வெளியே இருக்கிறது. சிஎஸ்கே அணி தற்போது புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது.
மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே சிஎஸ்கே அணி ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் குஜராத் அணியை பொறுத்தவரை முதல் இரண்டு இடத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்றால் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆக வேண்டும்.
இல்லையெனில் பஞ்சாப் அல்லது மும்பை ஆகிய அணிக்கு இடையிலான போட்டியில் ஏதேனும் ஒரு அணி வெற்றி பெற்றால் அவர்கள் முதல் இடத்திற்கு முன்னேறி விடுவார்கள். இதே போன்ற ஆர் சி பி அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் குஜராத் அணி மூன்றாவது அல்லது நான்காவது இடத்திற்கு சரிந்து விடும்.
இந்த நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் தேர்வு செய்தது. சிஎஸ்கே அணி இந்த தொடர் முழுவதும் பவர் பிளேவில் சரியாக விளையாடவில்லை என்ற பெரிய குற்றச்சாட்டு இருந்தது. குறிப்பாக சி எஸ் கே அணி தேர்வு செய்த ரச்சின் ரவீந்தரா, ராகுல் திருப்பாதி தீபக் ஹூடா போன்ற வீரர்கள் கடுமையாக தடுமாறினார்.
கான்வே பெரிய அளவில் சாதிக்கவில்லை. ருதுராஜ் காயம் காரணமாக வெளியேறியது சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. சிஎஸ்கே அணியின் தோல்விக்கு பவர் பிளேவில் சொதப்புவது முக்கிய காரணமாக இருந்தது. இந்த சூழலில் இளம் வீரர்கள் ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்பிய பிறகும் சிஎஸ்கே வீரர்கள் அதிரடி காட்டினாலும் விக்கெட்டுகளை இழந்து வந்தனர்.
இதையும் படிங்க: 2025 டு 2027.. 4வது WTC இந்திய அணியின் டெஸ்ட் தொடர் முழு அட்டவணை.. சிக்கலான சுற்று பயணங்கள்
ஆனால் இன்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி பெரும் ஒரு விக்கெட் மட்டுமே இருந்து பவர்பிளே முடிவில் 68 ரன்கள் எடுத்திருக்கிறது. குறிப்பாக ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரி என 34 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் அவருடைய 15 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தார். இதில் நான்கு பவுண்டரிகள் அடங்கும்.