ஐபிஎல் 2025.. இறுதிப் போட்டியில் பரிசுத் தொகை எவ்வளவு? மற்ற விருதுகளுக்கு எவ்வளவு ரொக்கம்? – முழு விவரம்

0
19

ஐபிஎல் 2025 சீசனின் இறுதிப்போட்டியில், இதுவரை ஒருமுறைகூட கோப்பையை வெல்லாத பஞ்சாப் கிங்ஸும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதனால், இன்றைய போட்டியின் முடிவில் ஒரு புதிய அணி சாம்பியன் பட்டத்தை உறுதியாகக் கைப்பற்றும்.

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை, 2009, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போதிலும், மூன்று முறையும் தோல்வியைச் சந்தித்தது. இப்போது, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஆர்சிபி மீண்டும் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.

- Advertisement -

ஆர்சிபி vs பஞ்சாப்

கடந்த 18 ஆண்டுகளாக விராட் கோலி ஆர்சிபி அணியின் முதுகெலும்பாக விளங்கி வருகிறார். அவருக்கு ஒரு கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பது ஆர்சிபி அணி வீரர்களுக்கு நீண்ட நாள் கனவாக உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை, 18 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறது. ஆனால், 2014-ல் ஒரே ஒரு முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

11 ஆண்டுகள் கழித்து, மீண்டும் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது பஞ்சாப். குறிப்பாக, ஸ்ரேயாஸ் ஐயர், முந்தைய சீசனில் கொல்கத்தா அணியை சாம்பியன் ஆக்கிய கேப்டனாக, இப்போது பஞ்சாப் அணியை இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்துள்ளார்.
ஐபிஎல், உலகின் மிக விலை மதிப்புடைய விளையாட்டுத் தொடராக விளங்குகிறது.

- Advertisement -

பரிசுத் தொகை எவ்வளவு

இந்த சீசனில், வெற்றி பெறும் அணிக்கு பிசிசிஐ 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கவுள்ளது. இறுதிப்போட்டியில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடி ரூபாய், குவாலிஃபையர் சுற்றில் மூன்றாம் இடம் பெறும் அணிக்கு 7 கோடி ரூபாய், எலிமினேட்டர் சுற்றில் நான்காம் இடம் பெறும் அணிக்கு 6.5 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

இதையும் படிங்க: இன்று பஞ்சாப் வென்றால்.. 8 விருதுகளுடன் படைக்க இருக்கும் மெகா சாதனை.. 2வது அணியாக மாஸ் ரெக்கார்ட்

மேலும், ஆரஞ்சு தொப்பி (அதிக ரன்கள்) வெல்பவருக்கு 10 லட்சம் ரூபாயும், பர்பிள் தொப்பி (அதிக விக்கெட்டுகள்) வெல்பவருக்கு 10 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும். 2025 ஐபிஎல் சீசனில், எமர்ஜிங் பிளேயர் (வளரும் வீரர்) விருதுக்கு 20 லட்சம் ரூபாயும், மோஸ்ட் வேல்யூபிள் பிளேயர் (சிறந்த மதிப்புமிக்க வீரர்) விருதுக்கு 10 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படவுள்ளது. இதுதவிர, அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரருக்கு 10 லட்சம் ரூபாயும், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரருக்கு 10 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.

- Advertisement -