இன்று பஞ்சாப் வென்றால்.. 8 விருதுகளுடன் படைக்க இருக்கும் மெகா சாதனை.. 2வது அணியாக மாஸ் ரெக்கார்ட்

0
196
Pbks

இன்று ஆர்சிபி அணிக்கு எதிராக ஐபிஎல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வென்று கோப்பையை கைப்பற்றினால், ஐபிஎல் தொடரில் 8 விருதுகளையும் வென்ற இரண்டாவது அணியாக மும்பைக்கு அடுத்து பெரிய சாதனையை படைக்கும்.

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இரண்டு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால் போட்டி ஒருதலைப் பட்சமாக முடியாது என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் வியூகம்

இந்த ஆண்டு முதல்முறையாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் முழு கட்டுப்பாட்டையும் அவரே வைத்திருந்தார். எல்லா வீரர்களுக்கும் செல்லாமல் தான் திட்டமிட்டு வைத்திருந்த வீரர்களுக்கு மட்டுமே சென்று வாங்கினார்.

மிகக்குறிப்பாக ஆல்ரவுண்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நிறைய வீரர்களை வாங்கியிருக்கிறார். இதன் காரணமாக பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசை யாரையும் விட மிக நீண்டதாக இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் முதல் பந்தில் இருந்தே தாக்குதல் பாணியில் விளையாடுகிறார்கள். ரிக்கி பாண்டிங் இன் இந்த வியூகம்தான் அவர்களை இறுதிப் போட்டிக்குள் கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

பஞ்சாப் செய்யவிருக்கும் சாதனை

இன்று இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினால், ஐபிஎல் தொடரில் வழங்கப்பட்டு வரும் 8 விருதுகளையும் வென்ற இரண்டாவது அணியாக சாதனை படைக்கும். இதுவரை ஐபிஎல் தொடரின் அனைத்து விதமான விருதுகளையும் வென்ற ஒரே அணியாக மும்பை இந்தியன்ஸ் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மன்னிச்சிடுங்க விராட்.. சோகத்துக்கு தயாராகுங்க.. பஞ்சாப் கோப்பையை திருட போகுது – ஆஸி முன்னாள் கேப்டன் பேச்சு

ஐபிஎல் தொடரில் வழங்கப்படும் எட்டு விருதுகள் :
ஐபிஎல் டிராபி
ஃபேர் ப்ளே விருது
ஆரஞ்சு தொப்பி
ஊதா நிற தொப்பி
வளர்ந்து வரும் வீரர்
மிகவும் மதிப்புமிக்க வீரர்
சீசனின் சிறந்த கேட்ச்
அதிக சிக்ஸர்கள்

- Advertisement -