ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்து இருக்கிறது. இதன் மூலம் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி தங்களது அதிகபட்ச ஸ்கோரை பூர்த்தி செய்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நடப்பு சீசனில் 100 சிக்ஸர்களை சிஎஸ்கே அணி விளாசி இருக்கிறது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஏழாவது முறையாக 100 சிக்ஸர்களை அடித்த அணி என்ற பெருமையை பெற்றிருக்கிறது. முதலிடத்தில் மும்பை அணி 10 முறை 100 சிக்ஸர்கள் அடித்து உள்ளது. சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ஆயுஸ் மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார்.
19 பந்தில் அரைசதம்:
இதேபோன்று மற்றொரு இளம்வீரரான உர்வில் பட்ட 19 பந்துகளில் 37 ரன்கள் எடுக்க, கான்வே 35 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். இதைப் போன்று தென்னாப்பிரிக்காவில் நட்சத்திர வீரர் பிரவீஸ் அதிரடியாக விளையாடி 19 பந்துகளின் அரை சதம் கடந்தார். இதன் மூலம் 23 பந்துகளில் அவர் 57 ரன்கள் எடுத்தார்.
இதில் 5 சிக்சர், நான்கு பவுண்டரிகள் அடங்கும். ஜடேஜா 21 ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.இந்த நிலையில் தன்னுடைய ஆட்டம் குறித்து பிரவீஸ் பேசுகையில், முதலில் இப்படி சிக்சர் அடிக்கும் திறமையை எனக்கு வழங்கி ஆசீர்வதித்த கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நேரம் இருக்காது என பிரவீஸ் விளக்கம்:
நான் வீரருடன் என்ன கலந்து பேசுவேன் என்பதை என்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது. ஆனால் வேகப்பந்துவீச்சாளர்கள் வேகமாக பந்து வீசும் போது நிச்சயமாக பெரிய ஷாட் அடிக்க முடியும். கலீல் பந்தை நன்றாக ஸ்விங் செய்வார். இந்த ஆடுகளம் பேட்டிங்களுக்கு சாதகமானது.
நாங்கள் எங்களுடைய அடிப்படை விஷயங்களை தொடர்ந்து செய்வோம்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. பவர்பிளேவில் பட்டையை கிளப்பிய சிஎஸ்கே.. ஆயுஷ் மாத்ரே அதிரடி சம்பவம்
ஒவ்வொரு பந்தையும் யோசித்து விளையாட வேண்டும். தற்போது இன்னிங்ஸ் பிரேக்கில் என்னால் குளிக்க முடியாது. ஏனென்றால் பில்டிங்கிலும் நான் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்று பிரவீஸ் கூறியுள்ளார். இதனிடையே, ஒரு ஐபிஎல் சீசனில் அதிக முறை 200 ரன்கள் அடிக்கப்பட்ட மைதானத்தில் அகமதாபாத் முதலிடத்தில் இருக்கிறது. நடப்பு சீசனில் அகமதாபாத்தில் மட்டும் ஒன்பது முறை 200 ரன்கள் 2024 ஆம் ஆண்டு டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய மைதானங்களில் எட்டு முறை 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






