ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அதன் பிறகு 17 ஆண்டுகள் ஆகியும் ராஜஸ்தான் அணியால் மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த சோகத்தை சஞ்சு சாம்சன் துடைத்து வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
மேலும் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் திரும்பி இருப்பதால் ராஜஸ்தான் அணி வீரர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் இரண்டு அல்லது மூன்று பணிகளை செய்யும் வீரர் இருந்தால் அது அந்த அணிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும்.
அந்த வகையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராகவும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகவும், கேப்டன் ஆகவும் செயல்படுகிறார். ராஜஸ்தான் அணியில் மிகவும் முக்கியமான ஒரு தூணாக சஞ்சு சாம்சன் விளங்குகிறார்.
மருத்துவக்குழு தந்த அப்டேட்:
இந்த நிலையில்தான் சஞ்சு சாம்சன் கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது காயமடைந்தார். இந்த காயத்திலிருந்து அவர் இன்னும் மீளவில்லை. ராஜஸ்தான் அணி தங்களுடைய பயிற்சியை தொடங்கிய நிலையில் சஞ்சு சாம்சன் இன்னும் பெங்களூருவில் தான் தங்கி இருக்கிறார்.
சாம்சன் உடல் தகுதி குறித்து மருத்துவ குழு சோதித்து இருக்கிறார்கள். அதில் தற்போது முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்திருக்கிறது. சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், ஆனால் விக்கெட் கீப்பிங் செய்ய கூடாது என்றும் மருத்துவ குழு தெரிவித்து இருக்கிறது.
ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவு:
விக்கெட் கீப்பிங் செய்ய தொடங்கினால் அது அவருடைய காயத்தை மேலும் அதிகமாக்கும் என்பதால் மருத்துவ குழு இவ்வாறு கூறியிருக்கிறது. இதுதான் தற்போது ராஜஸ்தான் அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக இல்லை என்றால் அவர்கள் துருவ் ஜூரலை தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் சேர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: இங்கிலாந்தில் விளையாட போகும் 31 வயது இந்திய விக்கெட் கீப்பர்.. ஐபிஎல் தொடரில் புறக்கணிக்கப்பட்டதால் முடிவு
இதன் மூலம் ராஜஸ்தான் அணியின் காம்பினேஷன் பாதிப்பை உண்டாக்கும். மேலும் துருவ் ஜுரலை பெரும்பாலும் ராஜஸ்தான் அணி இம்பேக்ட் வீரராக தான் பயன்படுத்தும். தற்போது அவர் பிளேயிங் லெவனின் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ராஜஸ்தான் அணி தங்களுடைய யுத்தியை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.






