ஐபில் 2025 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து நான்காவது போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்ற சன்ரைசர்ஸ் அணி நடப்பாண்டில் முதல் போட்டியில் 280 ரன்களுக்கு மேல் அடித்தது. இதனால் சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் பலமாய்ந்த அணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தோல்வியை தழுவி வருகிறது. சன்ரைசஸ் அணி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ராயுடு,கடும் விமர்சனம் ஒன்றை வைத்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், சன்ரைசர்ஸ் அணியில் பேட்டிங்கில் எந்த பிரச்சனையும் இருப்பது போல் தெரியவில்லை.
குஜராத் அணியை பாருங்க:
ஒட்டுமொத்த அணியிலே பந்துவீச்சு தான் இருக்கிறது. நடு ஓவர்களில் நீங்கள் கவனித்தீர்கள் என்றால் எதிரணியின் விக்கெட் எடுக்கக்கூடிய பவுலர்கள் யாரும் அந்த அணியில் இல்லை. இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி கடும் சரிவில் இருக்கிறார்கள்.
ஆனால் குஜராத் அணியை பாருங்கள் சாய் கிஷோர், ரசித் கான், பிரசித் கிருஷ்ணா போன்ற பவுலர்கள் இருக்கிறார்கள். இந்த மூன்று வீரர்களும் எதிரணியின் ரன் குவிக்கும் வேகத்தை கட்டுப்படுத்துகிறார்கள். ஆனால் சன்ரைசர்ஸ் அணியில் அப்படி யாருமே இல்லை. எதிரணியின் விக்கெட் எடுக்கக்கூடிய எந்த பவுலும் இல்லை.
நல்ல பவுலர்கள் தேவை:
இதன் காரணமாக அவர்கள் தற்காப்பு நிலைக்கு சென்று விடுகிறார்கள் .இப்படி இருக்கும் போது உங்களால் எப்படி ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியும். ஐபிஎல் கோப்பை வெல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு நல்ல பவுலர்கள் தேவை என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. தொடர்ந்து 3வது தோல்வி.. சிஎஸ்கேக்கு பிளே ஆப் வாய்ப்பு கிடைக்குமா? இன்னும் எத்தனை போட்டிகளில் வெல்லனும்?
நேற்று குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் கூட சிம்ரஞித் சிங் ஒரு ஓவர் வீசி 20 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இரண்டு ஓவர்களில் 16 ரன்களும், அன்சாரி நான்கு ஓவர்கLil 36 ரன்கள் விட்டு கொடுத்தார். ஹர்சல் பட்டேல் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் நேற்று பந்து வீச வரவில்லை. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் சன்ரைசர்ஸ் வீரர் ஒருவர் கூட டாப் டன் பட்டியலில் இல்லை. சன்ரைசர்ஸ் அணியில் 5 போட்டிகளில் விளையாடி இருக்கும் முகமது சமி அதிகபட்சமாக ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திருக்கிறார்.






