ஐபிஎல் 2024 : மொத்தம் 523/8 ரன்கள்.. டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை.. விடாமல் போராடிய மும்பை.. ஹைதராபாத் முதல் வெற்றி

0
610
IPL2024

17ஆவது ஐபிஎல் சீசனில் எட்டாவது போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் விளையாடின. இந்தப் போட்டியில் ஆடுகளம் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்கள் மட்டுமே பாதிக்கும் செலுத்தும் அளவுக்கு இருந்தது. இதன் காரணமாக இரண்டு தரப்பிலிருந்தும் ரன் மழை பொழிந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுக்க, ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு மயங்க் அகர்வால் 13 பந்தில் 11 ரன், இந்த போட்டியில் முதல் வாய்ப்பைப் பெற்ற டிராவிஸ் ஹெட் 24 பந்தில் 62 ரன், மூன்றாவது இடத்தில் அனுப்பப்பட்ட அபிஷேக் சர்மா அதிரடியாக 16 பந்தில் அரை சதம் அடித்து, மொத்தம் 23 பந்தில் 63 ரன்கள் குவித்து வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் மற்றும் ஹென்றி கிளாசன் இருவரும் 55 பந்துகளில் 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். எய்டன் மார்க்ரம் 28 பந்தில் 42 ரன், ஹென்றி கிளாசன் 34 பந்தில் 80 ரன் எடுத்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து, ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் அதிகபட்ச ரன்னை ஹைதராபாத் சன்ரைசர்ஸ் பதிவு செய்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பும்ரா மற்றும் பியூஸ் சாவ்லா இருவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து சாதனை இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷான் 13 பந்தில் 34 ரன், ரோகித் பர்மா 12 பந்தில் 24 ரன் என நல்ல அதிரடியான துவக்கம் தந்தார்கள். அடுத்து நமன் திர் 14 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு முனையில் திலக் வர்மா அதிரடியாக விளையாடி 64 ரன்கள் எடுத்து, போட்டியில் மும்பை அணியை உள்ளே வைத்தார்.

இந்த நிலையில் 14 மற்றும் 15ஆவது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார், கேப்டன் கம்மின்ஸ் இருவரும் ஆறு ரன்களுக்கும் குறைவாக தந்து, மும்பைக்கு ஒரு ஓவருக்கு 20 ரன்கள் தேவை என்கின்ற நிலைக்கு எடுத்துச் சென்று விட்டார்கள். இதனால் இலக்கை துரத்தும் நம்பிக்கை மும்பை அணிக்கு தகர்ந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து வந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா 20 பந்தில் 24 ரன்கள், டிம் டேவிட் 22 பந்தில் 42 ரன், ரொமாரியோ ஷெப்பர்ட் 6 பந்தில் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்கள். முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : ரன் மழை பொழியும் ஹைதராபாத் மும்பை போட்டி.. யார்க்கர் நடராஜன் ஏன் விளையாடவில்லை.. வெளியான தகவல்

இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் எட்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 523 ரன்கள் அடித்திருக்கிறார்கள். ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து அடித்த அதிகபட்ச ரன்னாக இது பதிவாகி இருக்கிறது. மேலும் ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் இதுவே இரு அணிகள் சேர்ந்த அடித்த அதிகபட்ச ரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.