19.1 ஓவர்.. மில்லர் தோனி சாதனைக்கு செக்.. கம்மின்ஸ்க்கு கில் பதிலடி.. குஜராத் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி

0
221
Gill

இன்று ஐபிஎல் தொடரின் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் சன் ரைசர் ஹைதராபாத் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த இரண்டு அணிகளும் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டி வெற்றி மற்றும் ஒரு போட்டியில் தோல்வி கண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால் 16 (17), டிராவிஸ் ஹெட் 19 (14) ரன்கள் எடுத்தார்கள். அடுத்து வந்த இந்திய இளம் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 29 (20) ரன்கள் எடுக்க ஹைதராபாத் அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது.

- Advertisement -

ஆனால் இதற்கு அடுத்து போட்டிக்குள் திரும்ப வந்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் எய்டன் மார்க்ரம் 17 (19), அதிரடி பேட்ஸ்மேன் ஹென்றி கிளாசன் 24 (13) என அடுத்தடுத்து வெளியேற அந்த அணிக்கு நெருக்கடி உருவானது. இந்த நிலையில் கடைசி கட்டத்தில் ஷாபாஷ் அகமத் 22 (20), அப்துல் சமாத் 29 (14), வாஷிங்டன் சுந்தர் 0 (1) கம்மின்ஸ் 2 (2) ரன்கள் எடுக்க, ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தரப்பில் மோகித் சர்மா நான்கு ஓவர்களுக்கு 25 ரன்கள் மட்டுமே தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். தமிழக வீரர் சாய் கிஷோர் இடத்தில் வந்த நூர் அகமத் மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். 200 ரன்கள் அடிக்கும் என்று நினைத்த ஹைதராபாத் அணியை சிறப்பாக குஜராத் அணி தடுத்து நிறுத்தியது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சகா 25 (13), சுப்மன் கில் 36 (26), சாய் சுதர்சன் 45 (36) ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, கொஞ்சம் கொஞ்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றி இந்த போட்டியில் உறுதியானது. இறுதிவரை களத்தில் நின்ற டேவிட் மில்லர் 44 (27) மற்றும் விஜய் சங்கர் 14 (11) ரன்கள் எடுக்க, 19.1 ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இதையும் படிங்க : 1 இன்னிங்ஸ் 6 அரைசதம்.. பங்களாதேஷ் அணிக்கு தண்ணி காட்டும் இலங்கை.. இமாலய ரன் குவிப்பு

மூன்றாவது போட்டியில் விளையாடிய குஜராத் அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகவும், மூன்றாவது போட்டியில் விளையாடிய ஹைதராபாத் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகவும் அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு குஜராத் அணி முன்னேறியிருக்கிறது. மேலும் இந்த போட்டியில் டேவிட் மில்லர் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்தார். இதன் மூலம் ஆறு முறை தோனி ஐபிஎல் தொடரில் சிக்சர் அடித்து போட்டியை முடித்த சாதனையை சமன் செய்திருக்கிறார்.