கிரீனை தூக்கினதுதான் ஃபேவரைட்.. என் டார்கெட் சீக்கிரம் இந்திய அணிதான் – மயங்க் யாதவ் பேட்டி

0
814
Mayank

நடப்பு 17ஆவது ஐபிஎல் சீசனில் இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி அணியை அதன் சொந்த மைதானத்தில் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருக்கிறது. லக்னோ அணியின் இந்த வெற்றிக்கு மிக முக்கிய வீரராக, இளம் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று ஆர்சிபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு குயிண்டன் டி காக் 82, நிக்கோலஸ் பூரன் 40* ரன்கள் எடுக்க அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி தரப்பில் மேக்ஸ்வெல் 3 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு மகிபால் லோம்ரர் மட்டுமே 30 ரன்களை தாண்டி 32 ரன்கள் 13 பந்துகளில் அதிரடியாக எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் பங்களிப்பு செய்யாததால், அந்த அணி 19.4 ஓவர்களில் 153 ரன்கள் மட்டும் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது தோல்வி அடைந்தது.

லக்னோ அணியின் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் புதிய இளம் அதிவேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் நான்கு ஓவர்களில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி 14 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அவர் வீசியை 24 பந்துகளில் 16 பந்துகள் டாட் பந்துகளாக அமைந்தது. அவரது வேகத்தை சமாளித்து விளையாட ஆர்சிபி பேட்ஸ்மேன்களாலும் முடியவில்லை.

பஞ்சாப் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற மயங்க் யாதவ், ஆர்சிபி அணிக்கு எதிரான இந்த போட்டியிலும் ஆட்டநாயகன் விருது வென்றார். அவர் பேசும் பொழுது “இந்த உணர்வு நன்றாக இருக்கிறது. நான் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து ஆட்டநாயகன் விருது வென்றதை விட, இரண்டு போட்டிகளிலும் என்னுடைய அணி வெற்றி பெற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய அணிக்கு விளையாடுவது என்னுடைய முக்கிய நோக்கமாகும். அதில்தான் நான் மிகவும் கவனம் செலுத்தி வருகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : மயங்க் யாதவ் கிரேட் டேலண்ட்.. பையன்கிட்ட இந்த விஷயம் செம.. நாங்க தோத்தது இதனாலதான் – பாப் டு பிளிசிஸ் பேட்டி

இன்று என்னுடைய பேவரைட் விக்கெட் கேமரூன் கிரீன். வேகமாக பந்து வீசுவதற்கு நிறைய விஷயங்கள் பின்னணியில் முக்கியமாக அமைகின்றன. உங்களுடைய உணவு முறை, தூக்கம் மற்றும் பயிற்சி சரியாக இருக்க வேண்டும். இதனால் நான் இந்த விஷயத்தில் மிகவும் கவனமோடு தற்பொழுது செயல்பட்டு வருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.