வீடியோ: நான் அவுட்டா; பேட்ஸ்மேனுக்கு என்ன நடக்குதுன்னு புரியாத பாலை போட்டு போல்டு எடுத்த ஜடேஜா!

0
1290

பேட்டிங் செய்து கொண்டிருந்த ஸ்டாய்னிஸ் கிளீன் போல்ட் ஆனது தெரியாத அளவிற்கு ஒரு பந்தை வீசி திணறடித்துள்ளார் ஜடேஜா. இணையதளத்தில் டிரெண்ட் ஆகி வரும் ஜடேஜா போல்டு எடுத்த வீடியோவை கீழே காணலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் இரு அணிகளுக்கும் இடையே பரபரப்பான ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் ஜெயித்த சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பௌலிங் செய்வதாக முடிவு செய்து அறிவித்தார்.

- Advertisement -

இதனையடுத்து களம் இறங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் இல்லாததால் கைல் மேயர்ஸ் உடன் துவக்க வீரராக மனன் வோரா களம் இறங்கினார். கைல் மேயர்ஸ் 14 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழக்க, இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 18 ரன்கள் சேர்த்திருந்தது.

அடுத்ததாக உள்ளே வந்த கரண் சர்மா 9 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். குருநாள் பாண்டியா ரன் எடுக்கும் எடுக்காமல் முதல் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சியை கொடுத்தார். ஓப்பனிங் இறங்கி நிதானம் காட்டி வந்த மனன் வோஹ்ரா 10 ரன்களுக்கு அவுட் ஆனார்.

27 ரன்களுக்கு மூன்று விக்கெடுகளை இழந்து தடுமாறிய லக்னோ அணிக்கு அடுத்து உள்ளே வந்த ஸ்டாய்னிஷ் நான்கு பந்துகளில் 6 ரன்கள் அடித்திருந்தபோது ஜடேஜா வீசிய மாயாஜால சூழலில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் போல்டாகி ஆட்டம் இழந்தார். போல்ட் ஆன பிறகு, ‘நான் அவுட்டா?’ என்று நடுவரை பார்த்து இரண்டு மூன்று முறை கேட்டபின் விரக்தியில் வெளிநடப்பு செய்தார். ஸ்டாய்னிஸ் போல்டு வீடியோவை கீழே பார்க்கலாம்.

- Advertisement -

44 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் போன பிறகு ஜோடி சேர்ந்த பூரான் மற்றும் ஆயுஸ் பதோணி இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்களை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு அணிக்கு ரன் சேர்க்க உதவினர்.இதில் நிக்கோலஸ் பூரான் ஒரு பக்கம் நின்றுகொண்டு விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார்.

மற்றொரு பக்கம் அதிரடி காட்டிவந்த ஆயுஸ் பதோனி 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி ஆறாவது விக்கெட்டிற்கு 59 ரன்கள் சேர்த்து லக்னோ அணியை சரிவிலிருந்து மீட்டனர். 100 ரன்களை கடக்கவும் உதவினர்.