ஐபிஎல் 2023 – ஆர் சி பிக்கு வந்த அதிர்ச்சி செய்தி.. ஒரே நாளில் இரண்டு வீரர் விலகல்

0
144

ஐபிஎல் தொடரில் கடந்த மூன்று சீசன்களாக பிளே ஆப் வரை சென்ற ஒரே அணி என்றால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான். இதனால் இம்முறை கோப்பையை வெல்ல முடியும் என்ற உத்வேகத்துடன் பெங்களூர் அணி உள்ளது .இந்த நிலையில் பெங்களூர் அணி தங்களது முதல் லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை வரும் இரண்டாம் தேதி தங்களது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறார்கள்.

- Advertisement -

ஏற்கனவே பெங்களூரு அணியில் ஸ்டார் வீரரான ஆல் ரவுண்டர் ஹசரங்கா, இன்னும் இந்தியா வந்து சேரவில்லை. மேலும் நட்சத்திர இந்திய வீரர் ராஜட் பட்டிடாரும் காயம் காரணமாக பாதி போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இதனால் வீரர்களை எப்படி தேர்வு செய்து விளையாடுவது என்ற குழப்பத்தில் இருந்த ஆர் சி பி அணிக்கு இன்று இரண்டு பெரிய இடி வந்து இறங்கியுள்ளது.

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட், ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .இதனால் ஆர்.சி.பி அணி பந்து வீச்சுக்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று பெங்களூரு அணியின் ஸ்டார் வீரரான மேக்ஸ்வெல் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  இதனால் அவருக்கு ஏற்பட்ட காயும் இன்னும் 100 சதவீதம் குணமடையாததால் அவர் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஹேசல்வுட்டுக்காக ஆர்சிபி அணி 7 கோடியை 75 லட்சம் ரூபாயும் மேக்ஸ்வெல்க்காக ஆர் சி பி 11 கோடி ரூபாயும் செலவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தொடக்க வீரர் டுபிளசிஸ், பின் ஆலன், விராட் கோலி ,தினேஷ் கார்த்திக்,டேவிட் வில்லி, மைக்கேல் பிராஸ்வெல், சிராஜ், ஹர்சல் பட்டேல் ஆகியோரின் நம்பி தான் தற்போது ஆர் சி பி அணி உள்ளது. ஆர் சி பி அணியின் நடுவரிசை, சுழற் பந்துவீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சு என மூன்றுமே குறை இருப்பதால் அந்த அணி என்ன செய்யப் போகிறது என்ற கலக்கத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.