16 வயதில் அறிமுகம்.. இந்தியா பெண்கள் கிரிக்கெட்ட வேற இடத்துக்கு கொண்டு போகுது – ஆரஞ்சு தொப்பி வென்ற எல்லீஸ் பெரி பேட்டி

0
530
Perry

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 33 வயதான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் எல்லீஸ் பெரி உலக கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான ஒரு வீராங்கனை. 16 வயதில் ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், தற்பொழுது 33வது வயதில் தொடர்ந்து 17 வருடங்களாக சர்வதேச மட்டத்தில் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

இந்தத் தொடரில் ஆர்சிபி அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு மும்பைக்கு எதிரான முக்கியமான போட்டியில் ஆறு விக்கெட் பந்துவீச்சில் எடுத்து பேட்டிங்கில் ஆட்டம் இழக்காமல் 40 ரன்கள் அடித்து அணியை ப்ளே ஆப் சுற்றுக்கு கொண்டு வந்தார்.

- Advertisement -

இதேபோல் ப்ளே ஆப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் மொத்த ஆர் சி பி அணியும் 135 ரன்கள் எடுக்க, அதில் எல்லீஸ் பெரி மட்டுமே 60 ரன்களுக்கு மேல் குவித்தார். மேலும் பந்துவீச்சில் வந்து துவக்க வீராங்கனை பாட்டியா விக்கெட்டை கைப்பற்றி கொடுத்தார்.

இப்படி மிக முக்கியமான ஆட்டங்களில் ஆர்சிபி அணிக்கு மிகச் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்தார். அவருடைய தரமான பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆர்சிபி அணிக்கு களத்தில் வீரியமிக்க தாக்கத்தை கொடுத்தது.

- Advertisement -

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணியை ஆர்சிபி சுழற் பந்துவீச்சு வீராங்கனைகள் பார்த்துக் கொண்டார்கள். ஆர் சி பி அணி 18.3 ஓவரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 113 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

இன்றைய போட்டியிலும் பேட்டிங் செய்ய வந்த எல்லீஸ் பெரி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்று, இறுதிப் போட்டி என்பதால் சரியான ஆட்ட விழிப்புணர்வுடன் பொறுமையை காட்டி, 34 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக நின்றார். மேலும் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியையும் இவரே கைப்பற்றினார்.

போட்டியை வென்ற பிறகு பேசிய எல்லீஸ் பெரி “ஆதரவு நம்ப முடியாத வகையில் இருந்தது. எங்களுக்கு கிடைத்த ஆதரவு என்று மட்டும் இல்லாமல், எல்லா அணிகளுக்கும் கிடைத்த ஆதரவு மிகப்பெரிய அளவில் இருந்தது. இது பெண்கள் கிரிக்கெட்டை மற்றொரு நிலைக்கு அழைத்துச் செல்லும். இங்கு கிரிக்கெட்டின் தரம் மிகச் சிறப்பாக இருக்கிறது. மேலும் இங்கு விளையாடுவது மகிழ்ச்சி அளிக்க கூடியதாக அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க : என் தாய்மொழி கன்னடம் இல்ல.. இப்ப சொல்றேன் ஈ சாலா கப் நம்து.. கொண்டாடுங்க – ஸ்மிருதி மந்தனா பேட்டி

ரிச்சா கோஸ் அருமையான திறமை மிக்க இளம் வீராங்கனை. அவரிடம் எல்லா வகையான ஷாட்களும் இருக்கிறது. நாங்கள் அமைதியாக விக்கெட்டை இலக்காமல் இருந்து பொறுமையாக விளையாடிய வெல்ல வேண்டும் என்று நினைத்தோம். இதற்காக லூஸ் டெலிவரிகளுக்கு காத்திருந்தோம். எங்கள் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். மேலும் ஸ்ரேயங்கா திறமையான இளம் வீராங்கனை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்

- Advertisement -