சிஎஸ்கே பிளேஆப் வாய்ப்பு எப்படி உள்ளது?.. 2 போட்டிகளில் அடிக்க இருக்கும் லக்.. யார் பிரச்சனை?

0
29
CSK

தற்போது சிஎஸ்கே அணிக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது குறித்த முழு அலசலை பார்க்கலாம்.

தற்போது பத்து போட்டிகளில் விளையாடி இருக்கும் சிஎஸ்கே அணி மொத்தம் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகள் உடன் உள்ளது. இன்னும் நான்கு போட்டிகள் மீதம் உள்ள நிலையில் மூன்று போட்டிகளை வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்கின்ற சூழ்நிலை உள்ளது.

- Advertisement -

இரண்டு போட்டி லக்

இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அடுத்த இரண்டு போட்டிகளையும் தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் மே 10 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் தற்போது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. காரணம் அந்த அணி மிகவும் பலவீனமாக இருக்கிறது. எனவே இதை பயன்படுத்திக் கொண்டு இரண்டு போட்டிகளையும் வென்றால் சிஎஸ்கே 12 போட்டிகளில் 7 வெற்றிகள் உடன் 14 புள்ளிக்கு சென்று விடும்.

- Advertisement -

இங்குதான் சிக்கல்

இதைத்தொடர்ந்து சிஎஸ்கே மே 18 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராகவும், மே 21 ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராகவும் விளையாட இருக்கிறது. இந்த இரண்டு அணிகளுமே வலிமையான அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிஎஸ்கே அணியின் முதுகெலும்பு நான் இல்லை இந்த வீரர்தான்.. வாய்ப்பு மட்டும் கொடுத்தா போதும் – ருதுராஜ் பேச்சு

சிஎஸ்கே அணி லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் இரண்டு போட்டிகளையும் வென்றால், அடுத்த ஹைதராபாத் இல்லை குஜராத் அணிகளுக்கு எதிராக ஏதாவது ஒரு போட்டியை வென்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு சென்று விட முடியும். தற்போதும் சிஎஸ்கே அணி சுமாராகவே உள்ள நிலையில் செயல்பாடு சிறப்பாக மாறி உள்ளது. ஒருவேளை பிளே ஆப் சுற்றுக்கு சென்றால் அது சாதனையாகவே இருக்கும்.

- Advertisement -