தாங்களே சமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி.. செயின்ட் லூசியாவில் என்ன நடக்கிறது?

0
248
Afghanistan

ஆப்கானிஸ்தான் அணி தங்களது கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்று முன்னேறி இருக்கிறது. இந்த போட்டி நடைபெற இருக்கும் பார்படாஸ் செயின்ட் லூசியாவில் ஆப்கானிஸ்தான அணி ஒரு வித்தியாசமான பிரச்சனையை எதிர்கொண்டு சிரமப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்றில் முதல் மூன்று போட்டிகளில் எதிரணியை 100 ரன்களுக்குள் சுருட்டி அட்டகாசமாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. முதல் சுற்றின் கடைசிப் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியிடம் தோல்வியடைந்திருந்தாலும் அடுத்த சுற்று வாய்ப்பை அது பாதிக்கவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் இன்று சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் பார்படாஸ் செயின்ட்
லூசியா மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக இன்று விளையாட இருக்கிறது. அவர்கள் முதல் சுற்றிலும் வெஸ்ட் இண்டீசில் விளையாடிய காரணத்தினால், கண்டிஷன்கள் அவர்களுக்கு நன்றாக தெரிந்திருப்பது சாதகமான ஒன்றாக இருக்கிறது.

இந்த நிலையில் குறிப்பிட்ட இந்தப் போட்டியில் பார்படாஸ் செயின்ட் லூசியாவில் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹலால் உணவுகள் கிடைப்பதில் சிரமமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஐசிசி அவர்களுக்கு தயார் செய்யும் உணவில் எது ஹலால் என்று அவர்களால் தெரிந்து கொள்ள முடியாதது பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறது.

இதன் காரணமாக தற்பொழுது ஆப்கானிஸ்தான் அணி தாங்களே தங்களுக்கான உணவை சமைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயத்தில் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் மற்ற இடங்களில் இப்படியான பிரச்சனைகள் அவர்களுக்கு ஏதும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஒவ்வொரு முறையும் இந்த இங்கிலாந்து வீரர் காயப்படுத்துறார்.. பிளானே போட முடியல – ரோமன் பவல் பேட்டி

இன்னொரு பக்கத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் இரண்டாவது சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்ள உற்சாகமாக தயாராகி வருகிறார்கள். சூழ்நிலைகள் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கின்ற நிலையில், உலக தரமான சுழல் பந்துவீச்சாளர்களை வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான அணி இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு பெரிய நம்பிக்கையுடன் இருக்கிறது!