டாப் 10

இந்த ஆண்டு மட்டும் ஐசிசி தடை செய்த 5 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள்

2020 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் அவ்வளவாக நடைபெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இந்த ஆண்டு மீண்டும் சர்வதேச அளவில் தங்களது அணிக்காக விளையாடி வருவது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் ஒருசில சர்வதேச கிரிக்கெட் வீரர்களை ஐசிசி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

- Advertisement -

சென்ற ஆண்டு அவ்வளவாக கிரிக்கெட் போட்டி விளையாடாத பட்சத்தில், இந்த ஆண்டு கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகின்றனர். ஆனால் ஒருசில கிரிக்கெட் வீரர்கள் இதற்கு முன்பு செய்த ஒரு சில விஷயங்கள் அவர்களை இப்போது பெரிய அளவில் பாதித்திருக்கிறது.

ஐசிசி நிர்வாகம் தற்போது மிக கடுமையான சட்டத்திட்டங்களை கையாண்டு வருவதால், தவறு செய்யும் பட்சத்தில் மிகப்பெரிய தண்டனைகளை வழங்கி வருகிறது. அப்படி ஐசிசி விதிமுறையை மீறி தவறு செய்து ஐசிசி நிர்வாகம் மூலமாக தடைவிதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்

1. ஹீத் ஸ்ட்ரீக்

முன்னாள் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரரான இவர் ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்தியன் கிரிக்கெட் லீக்கில் அகமதாபாத் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது. ஜிம்பாப்வே அணிக்கு பல முறை மிகச் சிறப்பாக விளையாடிய வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இருப்பினும் ஒரு சில விஷயங்களை இவர் வெளியில் கசிய விட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருந்த பொழுது, அதே 2018 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா அணிகளுக்கு இடையே நடந்த முத்தரப்பு தொடர் நடந்து கொண்டிருந்த பொழுதும், ஆப்கானிஸ்டன் பிரிமியர் லீக் தொடர் நடந்து கொண்டிருந்த பொழுதும் இவர் சில விஷயங்களை வெளியே கசிய விட்டார்.

ஐசிசி சட்ட விதிமுறையை இவர் மீறிய காரணத்திற்காக, 8 ஆண்டுகாலம் இவரை தற்போது ஐசிசி நிர்வாகம் தடை விதித்துள்ளது. எனவே இனி 8 ஆண்டுகாலம் இவரால் இனி எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

2. டில்ஹர லோகுஹெட்டிகே

முன்னாள் இலங்கை அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவர், ஒன்பது முறை ஒரு நாள் போட்டிகளிலும் இரண்டு முறை டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர் தனது முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 2013ம் ஆண்டு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது முதல் ஒருநாள் போட்டியிலேயே மகேந்திர சிங் தோனி மற்றும் யுவராஜ் சிங் விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2014ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஒரு டி20 தொடரில் இவர் மேட்ச் பிக்சிங் தொடர்பாக சம்பந்தப்பட்ட இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக ஐசிஐசிஐ வரை 8 ஆண்டுகாலம் தடை செய்துள்ளது. இவரும் இனி 8 ஆனாலும் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

3. சைமன் அன்வர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடிய ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் இவர் ஆவார். 2017 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இவருடைய பெயர் அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது.

2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை டி20 தொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இவர் மேட்ச் பிக்சிங் செய்ய முயற்சி செய்தது தற்போது தெரியவந்துள்ளது. மேட்ச் பிக்சிங் தொடர்பாக இவர் சம்பந்தப்பட்டு இருப்பது தற்போது உறுதியாகியுள்ள நிலையில், ஐசிசி வரை 8 ஆண்டுகாலம் தடை விதித்துள்ளது. எனவே இவரும் இனி 8 ஆனாலும் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

4. முகமது நவீத்

ஐக்கிய அரபு அமீரக சிறந்த கிரிக்கெட் வீரரான இவர் அடிப்படையில் ஒரு ஆல்ரவுண்டர் வீரர் ஆவார். மொத்தமாக இவர் தனது கிரிக்கெட் கேரியரில் 39 ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

அன்வர் போலவே இவரும் 2019ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை டி20 தொடருக்கான முதல் சுற்று ஆட்டத்தில் மேட்ச் பிக்சிங் செய்ய முயற்சி செய்தது தற்போது தெரியவந்துள்ளது. அதன் காரணமாகவே இவரும் அன்வரும் ஒரே நாளில் 8 ஆண்டுகாலம் ஐசிசி நிர்வாகம் மூலமாக தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

5. நுவான் ஜோய்சா

இலங்கையைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடியவருமான இவர் மேட்ச் பிக்சிங் செய்ய முயற்சி செய்தது தற்போது தெரியவந்துள்ளது.

ஐசிசி சட்ட விதிமுறை மீறிய காரணத்திற்காக, இவரையும் ஐசிசி தற்போதைய ஆறு ஆண்டுகாலம் தடை விதித்துள்ளது. இனி ஆறு ஆண்டுகாலம் இவரால் எந்த வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களும் இந்த ஆண்டு ஐசிசி நிர்வாகம் மூலமாக தடை விதிக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக பேசியுள்ள கிரிக்கெட் வல்லுனர்கள், தண்டனை கடுமையாக இருக்கும் பட்சத்தில் இனி வருங்காலத்தில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் தவறு செய்ய மாட்டார்கள். எனவே ஐசிசி நிர்வாகம் செய்துள்ளது சரியான செயல் என்று கூறியுள்ளனர்.

Published by