8 வீரர்களை தக்க வைக்க அனுமதி? புதிதாக ஏற்பட்டுள்ள குழப்பம் – பிசிசிஐக்கு ஐபிஎல் உரிமையாளர்கள் கோரிக்கை

0
16
BCCI

இந்திய கிரிக்கெட் வாரியம் 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வரும் ஐபிஎல் டி20 லீக், உலகின் நம்பர்-1 பிரான்சிசைஸ் டி20 லீக்காக இருந்து வருகிறது.மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடத்துவது தொடர்பாக ஏப்ரல் 16ஆம் தேதி பிசிசிஐ ஐபிஎல் கூட்டத்தை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் பாதிக்கப்பட உள்ள முக்கிய விஷயங்கள் தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பிசிசிஐ ஐபிஎல் அணி உரிமையாளர்களிடம் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்? ஏலத்தில் எல்லா அணிகளும் எவ்வளவு பணத்தை செலவு செய்யலாம்? என்பது குறித்து சில யோசனைகளை கேட்டிருக்கிறது. இதற்குப் பெரிய அணிகள் தரப்பிலிருந்து சில மாதிரியான பதில்களும், சிறிய அணிகளிடமிருந்து அதற்கு நேர் எதிரான பதில்களும் வந்திருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

உதாரணமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் நல்ல செட்டில்ட் ஆன அணிகளாக இருக்கின்றன. எனவே இவர்கள் மெகா ஏலத்திற்கு ஒரு அணி எட்டு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும் என கேட்கிறார்கள். அதே சமயத்தில் பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் போன்ற அணிகள் தங்கள் அணிகளை பலமாக்க வேண்டும் என்றால், எல்லா அணிகளும் நான்கு வீரர்களை தக்க வைத்தால் மட்டும் தான் ஏலத்திற்கு நிறைய வீரர்கள் வர முடியும் என்று கேட்கிறார்கள். மேலும் ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை வாங்க 100 கோடி ரூபாய் ஒதுக்கலாம் என விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்பொழுது ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமம் மிகப்பெரிய அளவில் விற்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணிகளும் தங்களது வலிமையை உறுதி செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே பெரிய அணிகள் தங்களின் முதுகெலும்பான எட்டு வீரர்களை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கேட்கின்றனர். இப்படி நடந்தால் சிறிய அணிகள் புதிய வீரர்களை கண்டுபிடித்தால் மட்டுமே இவர்களிடம் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பிசிசிஐ தரப்பில் வெளியான தகவலில் “தற்போது எல்லாமே ஆலோசனையில் முதல் கட்டத்தில்தான் இருக்கிறது. மெகா ஏலத்தில் எத்தனை வீரர்களை தக்க வைப்பது என்பது குறித்து இன்னும் எந்த விதமான முழு முடிவும் எடுக்கப்படவில்லை. சில அணிகள் எட்டு வீரர்களை வரை தக்க வைக்க கேட்டிருக்கின்றன. இதுதான் நடக்க இருக்கும் கூட்டத்தில் முக்கிய விவாதமாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் சொன்ன இதை கம்மின்ஸ் ஆரம்பத்துல ஒத்துக்கல.. ஆனா கடைசியா ஏத்துக்கிட்டாரு – நிதிஷ் குமார் ரெட்டி பேட்டி

அதே சமயத்தில் சில அணியின் உரிமையாளர்கள் தங்கள் அணிகளை மீண்டும் புதிதாக உருவாக்க, ஏலத்தில் நிறைய வீரர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே இதற்கு நிச்சயம் அணி உரிமையாளர்கள் மத்தியில் எதிர்ப்பும் இருக்கும். ஏப்ரல் 16ஆம் தேதி நடக்க இருக்கும் கூட்டத்தில் முக்கியமான விவாத பொருளாக இதுவே இருக்கும்” என கூறப்பட்டிருக்கிறது.