INDvsSA.. ஜடேஜா விளையாடாதது ஏன்?.. வெளிவந்த உண்மை காரணம்.. பின்னணியில் ரோகித் டிராவிட் இல்லையா?

0
729
Jadeja

இன்று பாக்ஸிங் டே டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா செஞ்சுரியன் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில், இந்திய தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை மேற்கொள்ள முடிவு செய்தது. மழை வந்து நின்ற காரணத்தினால் வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று தென் ஆப்பிரிக்கா இந்த முடிவை எடுத்தது.

- Advertisement -

ஆனால் பெரும்பாலும் இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகளை அதிகம் வெற்றியை பெற்று இருக்கின்றன. அதனால் இந்த டாஸ் முடிவை இரு பக்கமாகவும் எடுத்துக் கொள்ள முடியாத நிலைதான் இருந்தது.

இந்த நிலையில் தென்ன் ஆப்ரிக்க அணியில் வேகப்பந்து வீச்சு கூட்டணியில் ரபாடா, யான்சன், பர்கர் மற்றும் கோட்சி என பலமாக அமைக்கப்பட்டிருந்தது.

இந்திய அணியின் தரப்பிலும் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் என வேகபந்துவீச்சாளர்கள் கொண்ட கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எனவே இரு அணிகளும் வேகம் பந்துவீச்சை முதன்மையாக கொண்டு வந்திருக்கின்றன.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய அணியில் இன்று ஆச்சரியப்படும் விதமாக ரவீந்திர ஜடேஜா இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றிருக்கிறார். இதுவரை இப்படியான ஒரு முடிவை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் எடுத்தது கிடையாது.

தற்போது ரவீந்திர ஜடேஜாவை ஏன் விளையாட வைக்கவில்லை என்ற காரணம் தெரிய வந்திருக்கிறது. ரவீந்திர ஜடேஜாவுக்கு கழுத்துப் பிடிப்பு ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தினால் அவர் விளையாடவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாகவே ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுகிறார். இல்லையென்றால் ரவீந்திர ஜடேஜா தான் விளையாடியிருப்பாரா? என்று தெரியவில்லை. ஆனாலும் தற்பொழுது இந்த மாற்றம் ஒரு புதிய துவக்கத்திற்கு அடிப்படையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை!