INDvsSA டெஸ்ட்.. நாளை இந்திய உத்தேச பிளேயிங் லெவன்.. அஸ்வினா சர்துலா?.. மாஸ் பேட்டிங் லைன் அப்!

0
423
Virat

நாளை இந்திய தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா வரும் வெளி அணிகளுக்கு, டெஸ்ட் போட்டியில் இந்த மைதானம் மிகவும் சவாலானது.

மேலும் போட்டித் தொடங்கும் முதல் இரண்டு நாட்களில் வானிலை மழை வரும் அறிகுறியோடு காணப்படுகிறது. இதனால் வேகப்பந்துவீச்சுக்கான சாதகம் மிக அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான அணி தேர்வில் இந்திய பேட்டிங் லைன் அப் என்பது எந்த குழப்பமும் இல்லாதது. மேலும் வலிமையானதும் கூட. எட்டாம் இடம் வரைக்கும் இந்திய அணியில் பேட்டிங் இருக்கும். கேஎல் ராகுல் இந்த முறை விக்கெட் கீப்பராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் பவுலிங் யூனிட்டில் எந்த ஐந்து பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள் என்பதுதான் கொஞ்சம் யோசிக்க வைக்கும் கேள்வி. மழைக் காரணத்தால் வேகபந்துவீச்சு சாதகம் இருப்பதால் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். எனவே சர்துல் தாக்கூர் விளையாடுவார்.

இதேபோல் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் விளையாடுவது உறுதி. மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார் இருவர் இருக்கிறார்கள். முகேஷ் பந்தை சரியான இடங்களில் வீசுவதோடு ஸ்விங் செய்வார். பிரசித் கிருஷ்ணா நல்ல பவுன்ஸ் எடுக்கக்கூடிய உயரமான பவுலர். இந்த இடம்தான் யார் என்று கணிப்பது மிகவும் கடினமான ஒன்று. பிரசித் கிருஷ்ணாவுக்கு கொஞ்சம் கூடுதல் வாய்ப்புகள் காணப்படுகிறது.

- Advertisement -

பேட்டிங் யூனிட்டை பொறுத்தவரையில் இந்த முறையும் ஜெய்ஸ்வால் துவக்க வீரராக வருவது மற்றும் கில் மூன்றாவது வீரராக தொடர்ந்து விளையாடுவது நடக்க இருப்பதாகவே தெரிகிறது. விராட் கோலிக்கு பிறகு ஸ்ரேயாஸ் வந்து அதற்கு அடுத்து கேஎல்.ராகுல் விளையாடலாம்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ஜெய்ஸ்வால் ரோஹித், சர்மா, கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா சர்துல் தாகூர், பும்ரா, சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.