INDvsSA ODI.. நாளை இந்திய உத்தேச பிளேயிங் லெவன்.. புதிய ஓபனர்ஸ்.. ரிங்கு அறிமுகம்.. அதிரடி மாற்றங்கள்!

0
3245
ICT

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் நாளை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி கேஎல்.ராகுல் தலைமையில் தென் ஆப்பிரிக்க அணியை சந்தித்து விளையாட இருக்கிறது.

இந்தத் தொடருக்கு 16 பேர் கொண்ட இந்திய அணி சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக், பாண்டியா, கில், பும்ரா, சமி, சிராஜ் என யாரும் இடம் பெறவில்லை.

- Advertisement -

மேலும் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு தரப்படாமல் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இவருடன் சேர்த்து ரிங்கு சிங் மற்றும் ரஜத் பட்டிதார் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அணியில் ருதுராஜ், சஞ்சு சாம்சன் திலக் வர்மா, அக்சர் பட்டேல் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். அனுபவம் குறைவான இந்த அணியை கொண்டு தென் ஆப்பிரிக்காவை அவர்களது மண்ணில் வெல்வது என்பது மிகவும் சவாலான காரியம்.

எனவே இருக்கும் அணியில் சிறந்த பிளேயிங் லெவனை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இருக்கிறது. கடந்த முறை இதே போல் கே எல் ராகுல் தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை மொத்தமாக இந்திய அணி இழந்தது.

- Advertisement -

தற்பொழுது இதற்கு பதிலடி தரும் விதமாக கேஎல் ராகுல் தலைமையில் மீண்டும் ஒரு வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறது. இதை இந்திய அணி எப்படி பயன்படுத்திக் கொள்கிறது என்று பார்க்க வேண்டும்.

இந்தத் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி :
ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (கே), சஞ்சு சாம்சன், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சஹர்.

நாளைய போட்டிக்கான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்:

ருதுராஜ், சாய் சுதர்ஷன், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், கேஎல்.ராகுல், ரிங்கு சிங், அக்சர் பட்டேல், தீபக் சகர் குல்தீப் யாதவ், ஆவேஸ் கான் மற்றும் அர்ஸ்தீப் சிங்.