INDvsSA.. நாளை 2வது டி20 போட்டி நடைபெறுமா? மழை வாய்ப்பு ஆடுகளம் எப்படி இருக்கிறது? முழு விவரம் உள்ளே!

0
364
ICT

இந்தியா ஆண்கள் கிரிக்கெட் அணியின் தற்போதைய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் முதல் தொடராக டி20 தொடர் நடைபெறுகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது தலைமையின் கீழ் இளம் வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று இந்த தொடரின் முதல் போட்டி இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடக்க இருந்தது. ஆனால் தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.

டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு அதிக சர்வதேச டி20 போட்டிகள் இல்லாத காரணத்தினால், இந்தத் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை கொடுக்கக்கூடிய ஒன்றாக அமைகிறது.

இதற்கு அடுத்து ஒருநாள் இடைவெளியில், நாளை செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இரண்டு அணிகளுக்கும் இடையே இரண்டாவது டி20 போட்டி நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டி கட்டாயம் நடைபெறுவது அவசியம் என்கின்ற நிலையில், போட்டி நடைபெறும் மைதானத்தைச் சுற்றியான வானிலை குறித்த தகவல்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நிர்வாகத்திற்கும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை என்பதுதான் தற்பொழுது கவலை அளிக்கும் செய்தி.

நாளை செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தைச் சுற்றிலும் 60% மழை பெய்யலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து மழை கொஞ்சம் நின்று, வானிலை தெளிவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. முழு மைதானத்தை மூடி வைக்காத காரணத்தினால் முதல் போட்டி ரத்தானது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை நாளை இதே நடந்தால் இரண்டாவது போட்டியும் இரத்தாகும்.

மேலும் இந்த மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஆட்டம் செல்ல செல்ல கொஞ்சம் ஒத்துழைப்பு கிடைக்கும். எனவே இங்கு முதலில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வதே சரியான ஒன்றாக அமையும்!