INDvsENG முதல் டெஸ்ட்.. நாளை வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. அக்சர் குல்தீப்?

0
263
ICT

நாளை 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் முதல் போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் துவங்கி நடைபெற இருக்கிறது.

இந்தத் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முதலில் இடம் பெற்ற விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்துவிலகி இருக்கிறார். இந்தத் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியும் முதல் இரண்டு டெஸ்டுகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் துவக்க வீரராக களம் வருவது உறுதியான ஒன்று. மேலும் விராட் கோலிக்கு பதிலாக இன்னும் எந்த வீரரும் அறிவிக்கப்படவில்லை. எனவே சுப்மன் கில் மூன்றாவது வீரராக வருவார்.

விக்கெட் கீப்பராக இடம்பெறாத கேஎல் ராகுலுக்கு ஆரம்பத்தில் பிளேயிங் லெவனில் இடம் இல்லை. தற்பொழுது விராட் கோலி இல்லாததால் நான்காவது இடம் அவருக்கு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஐந்தாவது இடம் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் ஆறாவது இடம் ரவீந்திர ஜடேஜாவுக்கும் வழங்கப்படும். மேலும் விக்கெட் கீப்பராக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்த கே.எஸ்.பரத் இடம்பெறவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

எட்டாவது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் வர, குல்தீபா இல்லை அக்சரா என்கின்ற ஒரு கேள்வி இருக்கும். கடந்த முறை இங்கிலாந்துக்கு எதிராக மிகச்சிறப்பாக செயல்பட்ட அக்சர் பிளேயிங் லெவனில் வரவே அதிக வாய்ப்பு உண்டு. இந்திய சூழ்நிலையில் அவருடைய டெஸ்ட் பேட்டிங் எதிர்பார்க்காத வகையில் மிகச் சிறப்பாக இருக்கிறது.

பத்து மற்றும் பதினொன்றாம் இடங்களில் வேகப்பந்துவீச்சாளர்கள் சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் இடம் பெறுவார்கள். இந்த இடத்தில் மற்றவர்களுக்கு இடம் கிடைப்பது கடினம்.

இதையும் படிங்க :இந்தியா கூடநாங்க இப்ப விளையாடறது.. ஃப்ரீ ஹிட் மாதிரிதான்” – இங்கிலாந்து மார்க் வுட் அதிரடி பேச்சு

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்கான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ரோகித் சர்மா, ஜெயசுவால், சுப்மன் கில், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, கே.எஸ்.பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், பும்ரா மற்றும் சிராஜ்.