INDvsAUS பெண்கள் கிரிக்கெட் பைனல்.. தொடரும் ஆதிக்கம்.. விட்டு தராத போராட்டம்!

0
244
Australia

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி இன்று முடித்திருக்கிறது.

ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி வென்று கைப்பற்றியது. இதற்கு அடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா அணி அபாரமாக விளையாடி வென்றது.

- Advertisement -

இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரண்டு போட்டிகளை இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று, கடைசிப் போட்டியை இறுதிப்போட்டியாக மாற்றின.

இந்த நிலையில் இன்று மும்பை டிஒய்.பாட்டில் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியா அணியின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடித்து இந்திய துவக்க வீராங்கனைகள் ஷபாலி வருமா 26, ஸ்மிருதிமந்தனா 29 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல துவக்கம் தந்தார்கள்.

- Advertisement -

இதற்குப் பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் வீராங்கனை ரிச்சா கோஸ் மட்டுமே அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். மற்ற யாரும் குறிப்பிடும்படி விளையாடவில்லை.

இறுதியாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அனபெல் சதர்லேண்ட் மற்றும் ஜார்ஜ் வார்கம் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு முதல் விக்கெட்டுக்கு பத்து ஓவர்களில் 86 ரன்கள் குவிக்கப்பட்டது. அதிரடியாக விளையாடிய கேப்டன் அலேசா ஹீலி 38 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் நடந்தார். இன்னொரு துவக்க வீராங்கனை பெத் மூனி தன் பங்குக்கு 45 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். இந்த இடத்திலேயே ஆஸ்திரேலியாவின் வெற்றி உறுதி ஆகிவிட்டது.

தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றதோடு தொடரையும் இரண்டுக்கு ஒன்று என வென்றது. இந்திய தரப்பில் பூஜா வஸ்ட்ரேகர் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

பெண்கள் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஆஸ்திரேலிய அணி, தற்போதைய இந்திய சுற்றுப்பயணத்தில் முதலில் டெஸ்ட் தொடரை தோற்று, அதற்கடுத்து பதிலடி தரும் விதமாக இரண்டு வெள்ளைப்பந்து தொடர்களையும் வென்று அசத்தியிருக்கிறது!