INDvsAUS.. நாளை இந்திய பிளேயிங் லெவன்.. 2 புதிய மாற்றங்கள்.. ஆஸிக்கு அடி தொடருமா?

0
9121
ICT

உலகக் கோப்பையை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதற்கு இங்கேயே முகாமிட்டு இருக்கிறது.

இந்த தொடரில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த பரபரப்பான முதல் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் நாளை ஞாயிறு இந்த தொடரின் இரண்டாவது போட்டி திருவனந்தபுரம் கிரீன்பீல்ட் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் வெல்வதின் மூலம் இந்திய அணி தொடரை வெல்வதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொள்ள முடியும்.

மேலும் இந்த போட்டியை வெல்ல வேண்டிய அவசியம் ஆஸ்திரேலிய அணிக்கு மிக அதிகமாக இருக்கிறது. இல்லையென்றால் அவர்கள் கடைசி மூன்று போட்டிகளை தொடர்ச்சியாக வென்றால் மட்டுமே வெல்ல முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இதன் காரணமாக டிராவிஸ் ஹெட் கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் அணிக்குள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. 200 ரன்கள் அடித்து தோல்வி அடைந்து இருக்கின்ற காரணத்தினால் இந்திய அணிக்கு பதிலடித்தர பெரிய அளவில் முயற்சி செய்வார்கள்.

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா கவலை தரக்கூடியவராக இருந்தார். ஆனால் அது முழுக்க பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் மற்றும் சிறிய மைதானம் என்பதால், இதுகுறித்து பெரிதாக கவலைப்பட தேவையில்லை.

போட்டி நடைபெற இருக்கும் திருவனந்தபுரம் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. எனவே நாளைய போட்டியில் பெரிய மாற்றங்கள் இந்திய அணியில் இருக்காது. பிரசித் கிருஷ்ணா இடத்தில் ஆவேஷ்கான் விளையாடலாம். சுழற் பந்துவீச்சுக்கு சாதகம் என்றால் ஒருவேளை வாஷிங்டன் சுந்தர் இடம்பெறலாம். இந்த இரண்டு மாற்றங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் சூழ்நிலையை பொறுத்து அமையும்.

மேலும் 2017 முதல் தற்பொழுது வரை திருவனந்தபுரம் கிரீன்பீல்ட் மைதானத்தில் தென்னாபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் இந்திய அணி விளையாடியிருக்கிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மட்டும் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கிறது.

நாளைய போட்டிக்கான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்:

ஜெய்ஸ்வால், ருத்ராஜ், இஷான் கிஷான், சூரியகுமார், திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஸ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா!