கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு.. மீண்டும் வருகிறார் ஜடேஜா.. இந்தியாவின் பிளேயிங் லெவன் அறிவிப்பு! – முதலில் பவுலிங் செய்கிறது இந்தியா!

0
318

சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இருவரும் ஓப்பனிங் செய்ய, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முடிவுற்ற பிறகு, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் துவங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

ரோகித் சர்மா சொந்தக்காரர்களுக்காக முதல் ஒருநாள் போட்டியில் இடம் பெறவில்லை. ஒருநாள் தொடருக்கு முதல் முறையாக துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்டியா, இந்த முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் பொறுப்பேற்று விளையாடுகிறார்.

அதேபோல் ஆஸ்திரேலியா ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருந்து வரும் பேட் கம்மின்ஸ், தாயார் மறைவினால் ஆஸ்திரேலியாவிலேயே இன்னும் இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பேற்று இந்த ஒருநாள் தொடரில் விளையாடுகிறார்.

வன்கடே மைதானத்தில் டாஸ் போடப்பட்டது. இதில் ஹர்திக் பாண்டியா டாசை வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் பிளேயிங் லெவனனில் கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இஷான் கிஷன் துவக்க வீரராக களம் இறங்குகிறார். ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாததால், சூர்யகுமார் யாதவ் பிளேயிங் லெவன் உள்ளே வந்திருக்கிறார். அத்துடன் கேஎல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

காயம் காரணமாக ஒருநாள் போட்டிகளில் நீண்டகாலமாக விளையாடலாம் இருந்த ஜடேஜா மீண்டும் இடம்பெற்று இருக்கிறார். ஷ்ரதுல் தாக்கூர் மற்றும் குல்தீப் ஆகியோருக்கும் இம்முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன்:

இஷான் கிஷன், சுப்மன் கில், விராட் கோலி சூரியகுமார் யாதவ், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷ்ரதுல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சமி, முகமது சிராஜ்