INDvsAFG டி20.. விராட் கோலி இல்லை.. NO.3 கில்லா சாம்சனா?.. புது ரேஸ் ஆரம்பம்!

0
240
Gill

இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் பஞ்சாப் மொஹாலி பிந்த்ரா மைதானத்தில் இன்று இரவு துவங்குகிறது.

ஆப்கானிஸ்தான் அணியை துவக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜட்ரன் வழி நடத்துகிறார். இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக திரும்பி இருக்கிறார். மேலும் இவருடன் சேர்த்து ரன் மெஷின் விராட் கோலியும் அழைக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இந்த அணியில் முக்கிய சேர்க்கையாக இஷான் கிஷான் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சங் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மாவுடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பொதுவாக அருகில் எந்த வடிவ உலகக்கோப்பை தொடர் இருக்கிறதோ, அதற்கு எதிர் வடிவத்தில் தான் சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். டி20 உலக கோப்பை தொடர் இருக்கின்ற பொழுது, தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டி20 அணியில் தேர்வு செய்யாமல், ஒரு நாள் கிரிக்கெட் அணியில்தான் தேர்வு செய்திருந்தார்கள்.

ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டில் கிடைத்த வாய்ப்பில் தென் ஆப்பிரிக்காவில் சதம் அடித்த சஞ்சு சாம்சனுக்கு டி20 இந்திய அணிகளும் இந்த முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இஷான் கிஷான் மனச்சோர்வின் காரணமாக ஓய்வைக் கேட்டு வாங்கி சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என்கின்ற தகவலை அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று உறுதிப்படுத்தியிருந்தார்.

துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் களம் இறங்குவது நிச்சயமாகிவிட்ட நிலையில், விராட் கோலி இல்லாத காரணத்தினால் மூன்றாவது இடத்தில் யார் பேட்டிங் செய்வார்கள் என்கின்ற கேள்வி இருந்து வருகிறது.

தற்பொழுது மூன்றாவது இடத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் தகுதியானவர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரையும் எடுத்துக் கொண்டால் மூன்றாவது இடத்தில் அதிக அனுபவம் பெற்றவராக டி20 கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடரிலிருந்து சஞ்சு சாம்சன் இருந்து வருகிறார். சுப்மன் கில் பொதுவாகவே சில காலமாக டி20 கிரிக்கெட்டில் சரியான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று மூன்றாவது இடத்தில் கில்லுக்கு வாய்ப்பு தந்து, ஜெய்ஸ்வாலும் சிறப்பாக விளையாடினால், அடுத்து அது யாருக்கு வாய்ப்பு தருவது என்கின்ற சிக்கலை உருவாக்கும். எனவே நேரடியாக மூன்றாவது இடத்தில் அனுபவம் வாய்ந்த சஞ்சு சாம்சனை களம் இறக்குவது சரியான முடிவாக இருக்கும். ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.