INDvsAFG.. பவுலிங் பேட்டிங்கில் கலக்கிய சிவம் துபே.. ஆப்கானை எளிதாக வீழ்த்திய இந்தியா!

0
177
Dube

இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இவர்களுக்கு பதிலாக கில், ஜிதேஷ் சர்மா மற்றும் சிவம் துபே ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் 23, இப்ராஹிம் ஜட்ரன் 28, அசமத்துல்லா ஓமர்சாய் 29, முகமது நபி 42, நஜிபுல் ஜட்ரன் 19 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு ஆப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்ததை விட அதிகமாக 158 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அக்சர் படேல் நான்கு ஓவர்களுக்கு 23 ரன்கள் மட்டும் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். அடுத்து முகேஷ் குமார் 4 ஓவர்களில் 33 ரன்களுக்கு இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்கம் தர வந்த கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் உடைய தவறால் பரிதாபமாக ரன் அவுட் ஆனார். கில் 23 ரன்கள் எடுத்த நிலையிலும், திலக் வர்மா 26 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு அடுத்து ரிங்கு சிங்குக்கு முன்பாக அனுப்பப்பட்ட ஜிதேஷ் சர்மா சூழ்நிலை பற்றி கவலைப்படாமல் அதிரடியாக விளையாடி 20 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த இடத்தில் பந்துக்கு பந்து ரன் எடுத்தால் போதும் என்கின்ற சூழல் உருவாகிவிட்டது.

இதற்கு அடுத்து நிலைத்து விளையாடிக் கொண்டிருந்த சிவம் துபே உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 17.3 ஓவர்களில் இந்திய அணியை இலக்கை எட்ட வைத்து வெற்றி பெற வைத்தது. சிவம் துபே 40 பந்துகளில் ஐந்து பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 60 ரன்களும், ரிங்கு சிங் 9 பந்துகளில் 16 ரன்களும் எடுத்தார்கள். பங்களாதேஷ் தரப்பில் முஜீப் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வென்று இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்திய இளம் வீரர்களின் டி20 செயல்பாடு இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது. பந்துவீச்சில் இரண்டு ஓவர்கள், ஒன்பது ரன்கள் தந்து ஒரு விக்கெட் மற்றும் பேட்டிங்கில் 60 ரன்கள் எடுத்த சிவம் துபே ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -