INDvsAFG.. கில் ஜெய்ஸ்வால் யாருக்கு வாய்ப்பு?.. சாம்சனா ஜிதேஷ் சர்மாவா?.. காரணங்கள் உள்ளே!

0
123
Jaiswal

இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதல்முறையாக வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடர் தனிப்பட்ட முறையில் விளையாட இருக்கிறது.

இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு நேற்று இரவு இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அறிவிக்கப்பட்டுள்ள இந்த இந்திய அணி தொலைநோக்கான பல விஷயங்களை முன்வைத்து தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. ருதுராஜ், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தேர்வு செய்யப்படாததும், சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டதற்கு பின்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது.

பொதுவாக இரண்டு துவக்க ஆட்டக்காரர்கள் இருக்கும் பொழுது, மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனை எடுக்கும் பொழுது, அங்கு ஒரு இடம் மீதியாகும். இதை வைத்து ஒரு பந்துவீச்சாளரையோ அல்லது பேட்மேனையும் தேர்வு செய்வார்கள்.

இப்பொழுது ரோகித் சர்மா இந்திய டி20 அணைக்குள் துவக்க ஆட்டக்காரராக வந்திருப்பதாலும், ஏற்கனவே துவக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருப்பதாலும், மூன்றாவது துவக்க ஆட்டக்கார விக்கெட் கீப்பர் தேவைப்படவில்லை. அதற்கு பதிலாக மிடில் ஆர்டர் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

மேலும் ப்ளேயிங் லெவலில் சஞ்சு சாம்சன் ஜிதேஷ் சர்மாவை தாண்டி இடம்பெறுவது சற்று கடினம். ஏனென்றால் ரிங்கு சிங்குக்குப் பிறகு கீழே வந்து அதிரடியாக விளையாட ஜிதேஷ் சர்மாதான் சரியான பேட்ஸ்மேன். மிடில் வரிசையில் விளையாட ஏற்கனவே பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். எனவே சஞ்சு சாம்சன் மாற்று விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக மட்டுமே இருப்பார்.

ரோகித் சர்மா கேப்டன் என்பதால் அவர் துவக்க வீரராக நிச்சயம் விளையாடுவார். இன்னொரு துவக்க வீரர் இடத்திற்கு ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் இருக்கிறார்கள். இந்திய அணிக்கு தற்பொழுது இடது வலது பேட்டிங் காம்பினேஷன் தேவைப்படுகிறது. எனவே இந்த காரணத்தினால் தில்லுக்கு முன்பாக ஜெய்ஸ்வாலுக்குதான் வாய்ப்பு கொடுக்கப்படும்.

எனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜெய்ஸ்வால் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் முதலில் வாய்ப்பு பெறுபவர்களாக இருப்பார்கள். இதற்கு அடுத்து கில் மற்றும் சஞ்சு சாம்சன் வாய்ப்பு பெறுவார்கள்!