இந்திய அணி தற்பொழுது ஜிம்பாப்வே நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சுப்மன் கில் தலைமையில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை ஜிம்பாப்வே ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் மாலை 4:30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான வலிமையான உத்தேச பிளேயிங் லெவனை பார்க்கலாம்.
இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய ஜெய்ஸ்வால் சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே மூவர் மட்டுமே இடம்பெற்றார்கள். இவர்கள் மூவரும் வெஸ்ட் இண்டிசில் இருந்து திரும்ப காலதாமதம் ஏற்பட்டதால், இவர்களுக்குப் பதிலாக சாய் சுதர்ஷன் ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ரானா மூவரும் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் இவர்கள் இரண்டு போட்டிக்கு மட்டுமே இந்திய அணி உடன் இருப்பார்கள். கடைசி மூன்று போட்டிகளுக்கு விடுபட்ட மூவரும் அணிக்குத் திரும்பி விடுவார்கள்.
தற்பொழுது ஜெய்ஸ்வால் இல்லாத காரணத்தினால் சுப்மன் கில் உடன் ருதுராஜ் துவக்க வீரராக களம் இறங்க அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் இடத்தில் விளையாடிய அனுபவம் இருக்கும் அபிஷேக் ஷர்மா இந்த முறையும் மூன்றாவது இடத்தில் களமிறங்கலாம்.
மேலும் நான்காவது இடத்தில் ரியான் பராக், ஐந்தாவது இடத்தில் ரிங்கு சிங், ஆறாவது இடத்தில் துருவ் ஜுரல், ஏழாவது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெறுவார்கள். பிரதான சுழல் பந்துவீச்சாளராக ரவி பிஸ்னாய் இருப்பார். மேலும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களாக ஆவேஷ் கான், கலீல் அகமது மற்றும் துஷார் தேஸ்பாண்டே விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
ஜிம்பாப்வே தொடருக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணி:
சுப்மன் கில் (கே), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், துருவ் ஜூரல் (வி. கீ), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா (வி. கீ), ஹர்ஷித் ராணா.
இதையும் படிங்க : ரோகித்துக்கு அதுக்காகவே நன்றி.. இது குடும்பம் மாதிரி.. இந்த பசங்க அன்பை இழக்க போறேன் – டிராவிட் உருக்கமான பேச்சு
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான உத்தேச பிளேயிங் லெவன் :
சுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரியான் பராக், ரின்கு சிங், துருவ் ஜூரல் (வி. கீ), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது மற்றும் துஷார் தேஷ்பாண்டே.