நாளை அமெரிக்க அணிக்கு எதிரான இந்திய உத்தேச பிளேயிங் XI.. ஜடேஜா துபே தேவையா.. சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

0
484
ICT

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது மூன்றாவது போட்டியில் நியூயார்க் நாசாவ் மைதானத்தில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் பலரும் எதிர்பார்க்கின்ற முக்கியமா மாற்றமான சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட உள்ள வாய்ப்புகளைப் பார்க்கலாம்.

இந்திய அணி நிர்வாகம் முதல் சுற்றில் அமெரிக்காவில் விளையாடுவதற்கு வித்தியாசமான முடிவைக் கொண்டு வந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் குல்தீப் யாதவை வெளியில் வைத்து, அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரையும் ஒரே அணியில் விளையாட வைத்தது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியின் பேட்டிங் நீளம் எட்டு வரை மாறியது. அதே சமயத்தில் சிவம் துபே அணியில் இருக்கின்ற காரணத்தினால், அணியில் மொத்தம் ஏழு பந்துவீச்சு விருப்பங்கள் இருந்தன. இந்த இடத்தில்தான் சிவம் துபே அல்லது ரவீந்திர ஜடேஜா இருவரில் ஒருவர் பிளேயிங் லெவலில் விளையாட வேண்டுமா? என்கின்ற விவாதங்கள் எழுந்திருக்கிறது.

சிவம் துபே ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டுமே தற்பொழுது விளையாடுவதால், அவரைவிட நம்பிக்கையான சஞ்சு சாம்சன் விளையாடலாம் என்றும், மேலும் ரவீந்திர ஜடேஜாவின் வேலைகளை அக்சர் படேல் செய்கிறார் எனும் பொழுது, ரவீந்திர ஜடேஜாவின் இடத்திலும் சஞ்சு சாம்சன் விளையாடலாம் என்கின்ற கருத்து பரவி வருகிறது. சிஎஸ்கே முன்னாள் வீரரான அம்பதி ராயிடுவே சக சிஎஸ்கே வீரர் சிவம் துபே இடத்தில் சஞ்சு சாம்சன் விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த மாற்றத்தை நாளை ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் செய்வார்களா? என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் தாண்டி முன்னாள் வீரர்களிடமும் எழுந்திருக்கிறது. ஆனால் இரண்டாவது சுற்றுக்கு வெஸ்ட் இண்டீஸ் செல்கின்ற காரணத்தினால், சிவம் துபே தொடர்ந்து அணியில் விளையாட வைக்கப்படுவார் என்றும், இதேபோல் ஜடேஜாவும் வெஸ்ட் இண்டீசில் சிறப்பாக இருப்பார், அதனால் அவரும் விளையாடுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இங்கிலாந்த பழிவாங்க இந்த தப்பான வேலை செய்ய மாட்டோம்.. நியாயமா ஆடுவோம் – ஆஸி கோச் பேட்டி

நாளை அமெரிக்க அணிக்கு எதிரான இந்திய உத்தேச வலிமையான பிளையிங் லெவன் :

ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ் சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, அர்ஸ்தீப் சிங், பும்ரா மற்றும் முகமது சிராஜ்.