நடப்பு டி20 உலகக்கோப்பையில் அடுத்த சுற்று முன்னேறுவதில் இங்கிலாந்து அணி தற்பொழுது பிரச்சினையில் சிக்கி இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஆன்ட்ரோ மெக்டொனால்ட் தங்களின் அடுத்த போட்டி குறித்து முக்கியமான கருத்து ஒன்றைக் கூறியிருக்கிறார்.
இந்த டி20 உலகக்கோப்பை பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா மற்றும் ஒமான் அணிகள் ஆகியவை இருக்கின்றன. இதில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிய போட்டி மழையின் காரணமாக டிரா ஆனது இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் பெரிய பிரச்சினையை உருவாக்கி இருக்கிறது.
இங்கிலாந்து அணி தங்களின் இரண்டு போட்டிகளில் ஒன்று டிரா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்விய என ஒரு புள்ளி மட்டுமே எடுத்து இருக்கிறது. மேற்கொண்டு அந்த அணிக்கு நமீபியா மற்றும் ஒமான் அணிகளுக்கு எதிரான போட்டி இருக்கிறது. இதில் ஒமான் அணி தோற்று வெளியேறிவிட, நமீபியா அணி இரண்டு போட்டி விளையாடி ஒரு போட்டியை வென்றிருக்கிறது. அடுத்த இரண்டு போட்டிகளை வென்றால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
இதேபோல் ஸ்காட்லாந்து அணி நல்ல ரன் ரேட் உடன் மூன்று போட்டியில் ஒரு போட்டி டிரா மற்றும் இரண்டு போட்டி வெற்றி என ஐந்து புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் போட்டியில் இந்த அணி கவுரவமான தோல்வி அடைந்தால் கூட ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருக்கும். இதன் காரணமாக இங்கிலாந்து அணி அடுத்த இரண்டு போட்டிகளையும் பெரிய ரன் ரேட்டில் வெல்ல வேண்டிய அவசியம் உருவாகும்.
இப்படியான சூழலில் நமீபியா அணிக்கு எதிரான போட்டி குறித்து ஆஸ்திரேலிய தலைமை பேச்சாளர் பேசும் பொழுது “நாங்கள் எதிரணி மற்றும் கண்டிஷன் எப்படி என்பதை பார்த்து அதற்கேற்ற வலிமையான பிளேயிங் லெவலை களம் இறக்குவோம். இங்கிலாந்து அணியின் சூழ்நிலை பற்றி நாங்கள் எதுவும் யோசிக்க மாட்டோம். மேலும் இங்கிலாந்து அணி அவர்களது கடைசி இரண்டு போட்டியில் வெல்ல வேண்டியது முக்கியம் என்கின்ற தெளிவான இடத்தில் இருக்கிறார்கள். மேலும் நாங்கள் கடந்த முறை டி20 உலக கோப்பையில் ரன் ரேட் இல்லாமல்தான் வெளியேறினோம்.
இதையும் படிங்க : ஷாகிப் நீங்க ஹைடன் கிடையாது பங்களாதேஷ் பிளேயர்தான்.. இதுக்கு வெட்கமா இல்லையா? – சேவாக் கருத்து
இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பிறகு எங்களுக்கு ஒரு சிறிய நல்ல திருப்பம் கிடைத்திருக்கிறது. மேலும் இது ஒரு சின்ன டோர்னமெண்ட். எனவே இதில் வீரர்களை சுழற்றி பரிசோதனைகள் செய்து பார்த்துக் கொள்ள முடியாது. நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் நாங்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று தெரியும். எனவே நாங்கள் அதற்குத்தான் முன்னுரிமை கொடுப்போம்” என்று கூறியிருக்கிறார்.