நடப்பு உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் அடுத்தடுத்து மிக வேகமாக நடக்கின்றன. நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஒருநாள் இடைவெளியில் நாளை பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா குறைந்தபட்சம் ஒரு மாற்றத்தை செய்வாரா? என்பது குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
நாளை இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, விவியன் ரிச்சர்ட் மைதானத்தில் நடக்க இருக்கிறது. பொதுவாக இந்த மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்து வந்திருக்கிறது.
இந்திய அணியை பொறுத்தவரையில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களை விளையாடவும், தேவைப்பட்டால் மூன்று பிரதான வேகப் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடவும் செய்யும் என நேற்று கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருந்தார்.
எனவே பங்களாதேஷ் அணியில் இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பதால் இரண்டு இடது கை சுழல் பந்துவீச்சாளர்களை வைப்பதற்கு பதிலாக, ஒருவரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் முகமது சிராஜை விளையாட வைக்கவும் வாய்ப்புகள் உண்டு. நீக்குவதாக இருந்தால் ரவீந்திர ஜடேஜாவை நீக்கலாம். அவர் இதுவரையில் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு சிக்சர் மட்டுமே அடித்திருக்கிறார். மேலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 98.27 எனவும், ஆவரேஜ் 12.07 எனவும் மோசமாக இருக்கிறது.
இல்லையென்றால் சிவம் துபே தற்போது ஏழாவது பந்துவீச்சு ஆப்ஷனாக இருக்கிறார். இவர் பந்து வீசுவதும் இல்லை. எனவே இவருடைய இடத்தில் ஜெய்ஸ்வால் இல்லை சஞ்சு சாம்சன் யாரையாவது விளையாட வைத்தும் பார்க்கலாம். ஆனால் இதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது. பெரும்பாலும் ரோகித் சர்மா நாளைய போட்டியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த மாட்டார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : இந்தியா உலகக் கோப்பையை வெல்ல அதிகம் நெருங்கிடுச்சு.. கோலிக்கு இதை செய்யுங்க போதும் – பிரையன் லாரா கோரிக்கை
பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :
ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங்.






