இந்திய கிரிக்கெட்

பாகிஸ்தான் மேட்ச்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. இனி கம்பீர் அணிதான்.. அஸ்வின் வரை சைலன்ட்டான சம்பவம்

நாளை ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என பார்க்கலாம்.

- Advertisement -

இன்று ஆசியக் கோப்பை இரண்டாவது சுற்றுப் போட்டிகள் ஆரம்பிக்கிறது. இந்த போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இதைத் தொடர்ந்து நாளை ஞாயிறு பாகிஸ்தான் இந்திய அணிகள் மோதிக் கொள்கின்றன.

இனி கம்பீர் பேச்சுதான்

நேற்று ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பௌலிங் யூனிட்டில் இரண்டு பிரதான வேகப்பந்துவீச்சாளர்களாக ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஸ்தீப் சிங் இருவரும் சேர்க்கப்பட்டிருந்தார்கள். வருண் சக்கரவர்த்தி மற்றும் பும்ரா இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களாலும் சிறிய அணிக்கு எதிராகவும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. யுஏஇ கண்டிஷன் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருக்கிறது. இதன் காரணமாக நாளைய போட்டியில் அர்ஸ்தீப் சிங் விளையாடுவதற்கான கதவுகள் அடைக்கப்பட்டு விட்டது. எனவே இனி கம்பீர் கொண்டு வந்த பழைய அணிதான் விளையாடும் என்று தெரிகிறது.

- Advertisement -

அஸ்வின் வரையில் சைலன்ட்

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பவுலரான அர்ஸ்தீப் தலையெழுத்தை பேட்ஸ்மேன்கள் கம்பீர் மற்றும் கில் எழுதுகிறார்கள் இது நியாயம் கிடையாது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்றைய போட்டிக்குப் பிறகு கம்பீர் முடிவை யாரும் விமர்சிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணிக்கு விளையாடிய வீரர்களே மீண்டும் களம் இறங்குவார்கள் என்று பேசப்படுகிறது.

இதையும் படிங்க : மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி.. இந்திய போட்டிக்கு முன்பு வினோத காரியம் – வெளியான தகவல்

இந்திய பிளேயிங் XI: அபிஷேக் ஷர்மா, கில், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா.

- Advertisement -
Published by
Tags: Ind vs Pak