இங்கி 3வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. 2 மாற்றங்கள்.. அந்த தவறை சரி செய்வாரா கம்பீர்?

0
1822
ICT

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டி20 போட்டி நாளை குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்று பார்க்கலாம்.

தற்போது இரண்டு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா மற்றும் சென்னை என நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி வலிமையான முன்னிலையில் இருக்கிறது.

- Advertisement -

சென்னையில் வெளிப்பட்ட பிரச்சனை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் பகுதி நேர சுழல் பந்துவீச்சாளர் அபிஷேக்சர்மாவுடன் சேர்த்து இந்திய அணியில் மொத்தம் ஐந்து சுழல் பந்துவீச்சாளர்கள் பந்து வீசினார்கள். இங்கிலாந்து அணியை 165 என 15 ரன்னுக்கு குறைவாக கட்டுப்படுத்தினாலும், அவர்கள் அந்தப் போட்டியில் மட்டும் 9 சிக்ஸர்கள் அடித்து இருந்தார்கள்.

அதிகப்படியான சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது அதிகப்படியான சிக்ஸர்களை அடிக்க உதவியது. எனவே தற்போது இந்திய அணிக்கு இரண்டாவது வேகப்பந்துவீச்சாளர் தேவையாக இருக்கிறது. முகமது ஷமி மூன்றாவது டி20 போட்டியில் விளையாடுவது இந்திய அணிக்கு சரியானதாக இருக்கும். ரவி பிஸ்னாய் இடத்தில் அவரை விளையாட வைக்கலாம்.

- Advertisement -

ரிங்கு சிங் ஆடுவாரா?

இரண்டாவது டி20 போட்டியில் ரிங்கு சிங்குக்கு முதுகுப் பகுதியில் பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் விளையாடவில்லை. தற்போது அவருக்கு இந்த பிரச்சனை சரியாகி இருந்தால், நிச்சயமாக நாளை மூன்றாவது போட்டியில் அவர் களமிறங்குவது உறுதி என்று எதிர்பார்க்கலாம்.

எட்டாவது இடத்தில் ஒரு பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கட்டாயம் வேண்டும் என்று கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்திருப்பதால் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவார். நிதீஷ் குமார் ரெட்டி காயத்தால் புதிதாக அணியில் இணைந்திருக்கும் சிவம் துபேவுக்கு உடனே வாய்ப்பு கிடைப்பது கடினம்.

இதையும் படிங்க : அவர் ஒரு சிறு குழந்தை.. பிசிசிஐ அழுத்தம் கொடுக்காம பத்திரமா பாத்துக்கணும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

இந்திய பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், முகமது ஷமி, அர்ஸ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி.

- Advertisement -