அவர் ஒரு சிறு குழந்தை.. பிசிசிஐ அழுத்தம் கொடுக்காம பத்திரமா பாத்துக்கணும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

0
184

இந்திய கிரிக்கெட் அணி சமீப காலமாக ஓய்வே இல்லாமல் தொடர்ச்சியான கிரிக்கெட் தொடர்களை விளையாடி வருகிறது. தற்போது இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய இளம் வீரர் குறித்து ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ஓய்வில்லாமல் விளையாடும் இளம் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தொடர்ச்சியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 என வரிசையாக கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க வீரர்கள் டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாடிவிட்டு அடுத்ததாக ஒரு நாள் தொடருக்கு தயாராக அவர்களுக்கு போதிய அவகாசம் இருக்கிறது. அதேபோல டி20 தொடரில் விளையாடும் வீரர்கள் அதில் மட்டுமே விளையாடுவதால் இடையில் ஓய்வு பெறுவதற்கு தகுந்த கால அவகாசம் கிடைக்கிறது.

ஆனால் இதில் குறிப்பாக இளம் வீரர்கள் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடுகிறவர்கள் காயத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதில் குறிப்பாக இந்திய அணியின் இளம் வீரர் நிதிஷ்குமார் ரெட்டி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதல் போட்டியில் விளையாடினார். ஆனால் அதற்குப் பிறகு இரண்டாவது போட்டியில் காயமடைந்து வெளியேறிய நிலையில் தற்போது தொடரை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அந்தப் பையன் ஒரு சிறு குழந்தை – ஆகாஷ் சோப்ரா

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நிதீஷ் குமார் ரெட்டி காயம் அடைந்துள்ளார். அவர் முழு தொடரில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார். என்ன நடந்திருக்கும் என்று நினைக்க வேண்டும். இது எப்படி ஆனது என்று நான் யோசிக்கிறேன். நீங்கள் சர்வதேச கிரிக்கெட் விளையாட துவங்கும் போது பணிச்சுமை என்பது வேறாக இருக்கும். பணிச்சுமை மற்றும் அழுத்தம் என்பது ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளிலும் விளையாடினார். அங்கு அவர் சிறப்பாக செயல்பட்டார் தொடர்ந்து களத்தில் இருந்தார். அவர் ஒரு இளம் பையன் சில நேரங்களில் உடல் நிலை தொடர்ச்சியாக விளையாட நீடிக்காது.

இதையும் படிங்க:வருண் உங்கள இப்படிதான் அவுட் பண்றாரு.. இதை முதல்ல கவனிங்க.. ஹாரி ப்ரூக்குக்கு ஆலோசனை கூறிய அஸ்வின்

திடீரென்று அவருக்கு காயம் உண்டாகி இருக்கிறது. எனவே அவருக்கு பதிலாக சிவம் தூபே தற்போது சேர்க்கப்பட்டிருக்கிறார். நித்திஷ் ரெட்டி ஒரு சிறு குழந்தை. வேலை சுமையும் அழுத்தமும் கைகோர்த்து இருக்கின்றன. அவர் ஒரு இளம் வீரர் என்பதால் உடல்நிலை தொடர்ச்சியாக சில நேரங்களில் நீடிக்காது. எனவே அவரது விஷயத்தில் பிசிசிஐ கவனம் கொள்ள வேண்டும்” என்று ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

- Advertisement -