இந்திய கிரிக்கெட்

ஆஸி முதல் டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. கம்பீரின் ரெகுலர் திட்டத்திற்கு சிக்கல்.. சாதிக்க முடியுமா?

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை துவங்க இருக்கும் முதல் டி20 போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும்? என்பது குறித்து பார்க்கலாம்.

- Advertisement -

இரு அணிகளுக்கும் இடையே நாளை கான்பெரா மைதானத்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி துவங்க இருக்கிறது. மேலும் இந்த தொடர் நவம்பர் எட்டாம் தேதி வரையில் நடைபெற்று முடிவுக்கு வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்ததால் இந்த தொடரை இந்திய அணி கைப்பற்ற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.

கம்பீரின் வழக்கமான திட்டம்

ஆசியக் கோப்பை தொடரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் இடங்களில் ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபேவை வைத்து மூன்று ஸ்பின்னர்களை கவுதம் கம்பீர் வசதியாக விளையாட வைத்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் விளையாடுவதும் ஹர்திக் பாண்டியா இல்லாததும் இந்திய அணிக்கு பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது.

தற்போது அவர் சுழல்பந்து ஆள்ரவுண்டர்களை நம்பி செல்ல முடியாத நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் சிவம் துபே இருவரையும் நம்பியிருக்க வேண்டி உள்ளது. பேட்டிங் வரிசையை பொருத்தவரையில் கில், அபிஷேக் சர்மா, திலக் வருமா சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், சிவம் துபே என 7 வீரர்கள் இடம் பெறுவார்கள்.

- Advertisement -

சிக்கலான பவுலிங் யூனிட்

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் விளையாடுகின்ற காரணத்தினால் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களை வைக்க வேண்டி உள்ளதால் எட்டாவது இடத்தில் ஓரளவுக்கு பேட்டிங் செய்யும் ஹர்ஷித் ராணா வந்து விடுவார், அடுத்து ஒரே ஒரு பிரதான சுழல் பந்துவீச்சாளராக வருண் சக்கரவர்த்தி, அடுத்த இரண்டு இடங்களில் அர்ஸ்தீப் சிங் மற்றும் பு ம்ரா இடம் பெறுவார்கள்.

16 பேர் கொண்ட இந்திய டி20 அணி :
இந்திய கிரிக்கெட் அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர்.

இதையும் படிங்க : அவர் மட்டும் களத்தில் நின்னா.. ஹாசில் வுட் கண்டிப்பா ஃபார்ம் அவுட் ஆயிருவார்.. இந்திய முன்னாள் துணை கோச்

இந்திய பிளேயிங் XI : அபிஷேக் ஷர்மா, கில், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், சிவம் துபே, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, அர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ரா.

- Advertisement -
Published by