இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரானது நாளை முதல் நடைபெற இருக்கும் நிலையில் இதற்காக இரண்டு அணிகளும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் துணை பயிற்சியாளரான அபிஷேக் நாயர் இந்தத் தொடர் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இதில் ஒரு நாள் தொடரானது 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ளது. இதனால் டி20 தொடரை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்ற நம்பிக்கையோடு டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி களமிறங்கும். இதில் ஆஸ்திரேலியா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஹாசில் வுட் திகழ்ந்து வருகிறார். ஒரு நாள் தொடரை வெற்றி பெறுவதற்கு ஆஸ்திரேலியா அணிக்கு முக்கிய காரணமாக விளங்கினார் என்று குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இது குறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் துணைப் பயிற்சியாளர் ஆன அபிஷேக் நாயர் இந்திய துவக்க வீரர் அபிஷேக் சர்மா பார்மில் இருந்தால் ஹாசில் வுட் ஃபார்ம் அவுட் ஆவார் என்று சில விஷயங்களை பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “அபிஷேக் ஷர்மா பார்மில் இருந்தால் ஹாசில் வுட் ஃபார்மில் இல்லாமல் இருப்பார். அவர் பேட்டிங் செய்யும் விதத்தைப் பார்த்தால் முதல் பந்திலேயே பவுண்டரி அல்லது சிக்சர் அடிப்பார் என்று தெரியும். பவர் பிளேவில் பயத்தை விதைத்தால் அது இன்னிங்ஸ் முழுவதும் தொடரும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. அபிஷேக் ஷர்மா பேட்டிங்கில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்பது அதுதான்.
இதையும் படிங்க:எனக்கும் சூர்யாவுக்கும் அந்த விஷயத்துல பயம் இல்ல.. நான் சக்சஸ் கோச்சா இருக்க நினைக்கல – கம்பீர் பேச்சு
அவர் ஆறு ஓவர்கள் பேட்டிங் செய்தால் இந்திய அணி நிச்சயமாக 60 முதல் 80 ரன்கள் எடுக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. இது அவரோடு பேட்டிங் செய்யக்கூடிய கூட்டாளியின் அழுத்தத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் எதிரணி மீதான அழுத்தத்தையும் அதிகரிக்கும்” என்று அவர் பேசி இருக்கிறார்.






