இந்திய கிரிக்கெட்

தெஆ 3வது ODI.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. முக்கிய ஒரு மாற்றம்.. கம்பீருக்கு அழுத்தம்.. தொடரை வெல்லுமா இந்திய அணி?

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு இந்திய அணியில் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம்? என்று பார்க்கலாம்.

- Advertisement -

தற்போது இரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், முதல் இரண்டு போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் இருக்கிறது. எனவே மூன்றாவது போட்டி இறுதிப் போட்டியாக அமைகிறது. டெஸ்ட் தொடரை தோற்று இருப்பதால் இந்தத் தொடரை வெல்ல வேண்டிய அழுத்தத்தில் இந்திய அணி இருக்கிறது.

இந்திய அணியின் பிரச்சனை

தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் நீளம் எட்டு வரையில் மிகவும் வலிமையாக இருக்கிறது. மேலும் அனைவரும் அதிரடியாக விளையாட கூடியவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக கடந்த போட்டியில் 358 ரன்கள் இந்திய அணி குவித்த பொழுதும், நீளமான பேட்டிங் வரிசையை வைத்து தென் ஆப்பிரிக்கா வென்றது.

இந்திய அணிக்கு எட்டாவது இடத்தில் ஹர்ஷித் ராணா இருக்கிறார். மேலும் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. எனவே இந்திய அணி ஆறு பேட்ஸ்மேன்களுடன் விளையாடுவது போல இருக்கிறது. இந்த பலவீனம் இந்திய அணிக்கு பிரச்சனையாக அமைகிறது.

- Advertisement -

ஒரே ஒரு மாற்றம்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் இருப்பதால், சுமாராக செயல்பட்டு வரும் பிரசித் கிருஷ்ணாவை மாற்ற முடியாது. ஆனால் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக, ஆப்ஸ்பின் பேட்டிங் ஆல் ரவுண்டர் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியது கட்டாயமாகிறது.

மேலும் அடுத்த போட்டி பேட்டிங் செய்ய அதி சாதகமான விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறுவது இந்திய அணிக்கு கொஞ்சம் பின்னடைவை கொடுக்கிறது. அடுத்த போட்டியில் ஆவது இந்திய அணி டாஸ் வெல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

இதையும் படிங்க : விராட் கோலியின் இடத்தில் மட்டும் அவர் களமிறங்கினா.. அவரோட பேட்டிங் ஃபார்ம் வேற லெவல்ல இருக்கும் – டேல் ஸ்டெயின் கருத்து

இந்திய பிளேயிங் லெவன்: ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் திலக் வர்மா, கேஎல்.ராகுல் ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா.

- Advertisement -
Published by

Recent Posts