ஜெய்ஸ்வால் நீக்கம்.. வருண் சக்கரவர்த்தி சேர்ப்பு.. பின்னணி காரணம் என்ன? – கம்பீர் பேட்டி

0
605
Jaiswal

சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் ஜெய்ஸ்வாலை நீக்கிவிட்டு வரும் சக்கரவர்த்தியை சேர்த்தது ஏன் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார்.

சாம்பியன் டிராபிக்கு இறுதியாக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் பும்ரா இடத்தில் ஹர்ஷித் ராணா இடம்பெற்று இருக்கிறார். அதிரடியாக ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டிருக்கிறார். தற்போது இந்த தேர்வு பலருக்கும் பல கேள்விகளை உண்டாக்கி இருக்கிறது.

- Advertisement -

தப்பித்த வாஷிங்டன் சுந்தர்

நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு வரும் சக்கரவர்த்தியை இந்திய அணியில் சேர்ப்பார்கள் என்றால் வாஷிங்டன் சுந்தரை நீக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு சுழல் பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் இடம்பெறுவது உறுதி என்று தெரிகிறது. எனவே அவர்களில் ஒருவர் காயமடைந்தால் அந்த இடத்திற்கு விளையாட வாஷிங்டன் சுந்தர் போன்ற ஒரு ஸ்பின் ஆல்ரவுண்டர் தேவை என்பதால் அவரை நீக்காமல் ஜெய்ஸ்வாலை நீக்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வருண் சக்கரவர்த்தி சேர்ப்பு ஏன்?

இதுகுறித்து கம்பீர் பேசும் பொழுது “ஜெய்ஸ்வாலை நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்தியை நாங்கள் சேர்ப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. அதாவது மிடில் ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்துவதற்கு எங்களுக்கு இன்னொரு பவுலர் வேண்டுமென்று நினைத்தோம். இதன் காரணமாகவே நாங்கள் தற்போது அவரை இந்திய அணியில் கொண்டு வந்திருக்கிறோம்”

இதையும் படிங்க : ஆர்சிபி-க்கு விராட் கோலியை.. புதிய கேப்டனாக நியமிக்காதது ஏன்? – ஆன்டி பிளவர் தந்த விளக்கம்

“வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்க முடியும். இதுவரை அவரை சந்தித்து விளையாடாத அணிகளுக்கு அவர் ஒரு எக்ஸ் காரணியாகவும் இருக்க முடியும். இதனால் அவர் உடனடியாக பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்று விடுவார் என்று நான் சொல்லவில்லை. எல்லாவற்றையும் விட வலுவான பந்துவீச்சு வரிசையை வைத்திருக்க வேண்டியது முக்கியம் என்பதால் அவரைத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம்” என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

- Advertisement -