இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக திகழும் கௌதம் கம்பீர் தனது இந்திய ஆல் டைம் பெஸ்ட் 11 அணியை தேர்வு செய்திருக்கிறார். அதில் மகேந்திர சிங் தோனி இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக நவீன கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் இரண்டு இந்திய அணி வீரர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலக கோப்பைக்குப் பிறகு ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக, அவருக்கு பதிலாக இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கொண்டுவரப்பட்டார். அவரது தலைமையின் கீழ் சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் வெற்றியும், ஒரு நாள் தொடரில் தோல்வியும் அடைந்திருக்கும் நிலையில் கம்பீர் தனது ஆல் டைம் பெஸ்ட் 11 அணியை தேர்வு செய்து இருக்கிறார்.
அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக வீரேந்திர சேவாக் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு பல போட்டிகளில் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் மூன்றாவது வரிசையில் இருக்கிறார். மிடில் ஆர்டர் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பெற்று இருக்கின்றனர்.
இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினும், கிங் விராட் கோலி அடுத்தடுத்த இடங்களில் இடம் பிடித்திருக்கின்றனர். அதற்கு அடுத்ததாக பேட்டிங் ஆல் ரவுண்டர் வரிசையில் யுவராஜ் சிங் இடம் பெற்று இருக்கிறார். விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனி இதில் இடம் பிடித்திருக்கிறார். தோனியின் தலைமையில் மூன்று கோடி ஐசிசி கோப்பைகளையும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுழற் பந்துவீச்சாளர்கள் வரிசையில் அனில் கும்ப்ளே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரிடம் பெற்றிருக்கிறார்கள். அதற்குப் பிறகு வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் இர்பான் பதான் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் கடைசி இரண்டு இடங்களில் இருக்கிறார்கள். இதில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இந்தியாவுக்கு டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா மற்றும் உலகின் சிறந்த பந்துவீச்சாளராக திகழும் பும்ரா இதில் இடம்பெறாதது ஆச்சரியம் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க:33 வருடம்.. லார்ட்ஸில் இலங்கை அணி வரலாற்று தோல்வி.. தொடரை வென்ற இங்கிலாந்து.. 2வது டெஸ்ட்
கௌதம் கம்பீர் வெளியிட்ட இந்தியா ஆல் டைம் பெஸ்ட் பிளேயிங் லெவன் அணி: வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், எம்.எஸ். தோனி (Wk), அனில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஷ்வின், இர்பான் பதான், ஜாகீர் கான்.