இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோடக், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் பார்ம் பற்றி முக்கியமான சில விஷயங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இன்று கட்டாக் நகரத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக சம்பிரதாய பத்திரிக்கையாளர் சந்திப்பை இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர் எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி 10 இன்னிங்ஸ் சோகம்
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி பத்து இன்னிங்ஸ்களில் ஏழு முறை ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றம் அளித்திருக்கிறார். அவரது பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருக்கிறது என்பதை தாண்டி, அவர் ஆட்டம் இழக்கும் விதம் அவரது உடல் தகுதி குறித்து சந்தேகத்தை உருவாக்கும் அளவுக்கு இருப்பது கவலை அளிக்கிறது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்து வரவிருப்பதாலும், ரோஹித் சர்மா இந்திய ஒருநாள் அணியின் துவக்க ஆட்டக்காரராக இருப்பதோடு கேப்டனாகவும் இருப்பதால் அவரது ஃபார்ம் ஒட்டுமொத்த அணியையும் பாதிக்கும் என இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் கவலை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு அது கவலை இல்லை
இது குறித்து இந்திய அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளராக வந்திருக்கும் சிதான்சு கோடக் கூறும்பொழுது “ரோஹித் சர்மா பேட்டிங்கில் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் விளையாடிய கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளில் அவர் 58, 64, 35 ரன்கள் என நல்ல விதத்தில் எடுத்திருக்கிறார். மேலும் அவர் மொத்தம் 31 சதங்கள் அடித்து இருக்கிறார் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க : 132 ரன்.. ஜாம்பவான் லிஸ்டில் ரோஹித்.. சச்சின் டிராவிட் சாதனையை உடைக்க பொன்னான வாய்ப்பு.. முழு விபரம்
“சமயங்களில் ஒரு வீரருக்கு மோசமான பேட்ச் இருக்கும் பொழுது நான் அவர்களது பார்ம் பற்றிய கவலைப்படவோ அல்லது அது குறித்து நினைக்கவோ இந்த இரண்டையும் செய்ய மாட்டேன். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் அவருக்கு கொஞ்சம் கடினமான காலகட்டமாக இருந்தது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் எப்பொழுதும் ரன்கள் குவித்து வருகிறார். எனவே எனக்கு இது சம்பந்தமாக எந்த கவலையும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.






