இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 22 ரன்கள் எடுப்பதன் மூலமாக சச்சின் டெண்டுல்கரின் எலைட் பட்டியலில் ராகுல் டிராவிட்டை முந்துவதற்கு தயாராக இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து ஒருநாள்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மீண்டும் இந்திய அணியோடு இணைந்து இருக்கிறார். இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 7 பந்துகளில் 2 ரன் மட்டுமே எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய அணியில் இவரது பேட்டிங் ஃபார்ம் சரிவை சந்தித்து வரும் நிலையில், இங்கிலாந்து தொடருக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளதால் மீண்டும் பழைய பேட்டிங் பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எனவே அதற்கு மீதமுள்ள இந்த இரண்டு ஒருநாள் போட்டிகளை பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். இந்த சூழ்நிலையில் இதுவரை 266 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 10,868 ரன்கள் குவித்துள்ளார்.
ரோஹித் சர்மா படைக்கப் போகும் சாதனைகள்
இன்னும் 22 ரன்கள் எடுப்பதன் மூலமாக ஒருநாள் தொடரில் 10,889 ரன்கள் குவித்துள்ள ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் தொடரில் மொத்தமாக 18,426 ரன்கள் குறித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இன்னும் 132 ரன்கள் எடுத்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடிப்பதற்கு மிகப்பெரிய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க:SA டி20 லீக் ஃபைனல்.. குட்டி ஏபிடி ரபாடா அசத்தல்.. பரிதாபமான சன்ரைசர்ஸ்.. சாம்பியன் ஆன எம்ஐ அணி
இன்னும் 132 ரன்கள் குவித்தால் குறைந்த ஒரு நாள் போட்டிகளில் 16000 ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்காக சச்சின் டெண்டுல்கர் 276 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11000 ரன்கள் குவித்துள்ள நிலையில் ரோஹித் சர்மா, 258 போட்டிகளில் 10,868 ரன்கள் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி 222 போட்டிகளில் 11000 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். எனவே இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா திரும்பவும் சிறப்பாக விளையாடி மீண்டும் தனது பழைய பார்மை மீட்டெடுப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.