இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி ஐந்தாவது நாளில் காயமடைந்துள்ள ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வருவாரா என்பது குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சூ கோடக் வெளிப்படையான பதில் அளித்திருக்கிறார்.
தற்போது இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து 137 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்ய வேண்டும் என்றால் மேற்கொண்டு இன்றைய நாளில் குறைந்தது 75 ஓவர்கள் விளையாட வேண்டும். தற்போது களத்தில் கேஎல்.ராகுல் மற்றும் கில் இருவரும் நிற்கிறார்கள்.
இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கால் பாதத்தில் கடுமையாக காயம் அடைந்த காரணத்தினால் ரிஷப் பண்ட் பாதியில் வெளியேறினார். அதே சமயத்தில் அடுத்த நாள் மீண்டும் திரும்பி வந்து முடிந்த வரையில் விளையாடி அரை சதம் அடித்தார்.
இந்த நிலையில் மிக முக்கியமான ஐந்தாவது நாளில் நல்ல தடுப்பாட்டம் வைத்திருக்கிற ரிஷப் பண்ட் தேவையாக இருக்கிறார். எனவே அவர் மீண்டும் காயத்தை பொருட்படுத்தாது வந்து விளையாடுவாரா? என்பது இந்திய ரசிகர்களுக்கு பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.
இதுகுறித்து பதில் அளித்துள்ள இந்திய பேட்டிங் பயிற்சியாளர் கூறும் பொழுது “ரிஷப் பண்ட் ஐந்தாவது நாளில் பேட்டிங் செய்ய வருவார். அவர் பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானால் களம் இறங்குவார். அதே நேரத்தில் கேஎல் ராகுல் மற்றும் கில் இருவரும் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. முதல் இரண்டு விக்கெட்டுகள் முதல் ஓவரில் விழுந்த பிறகு அவர்கள் விளையாடிய விதம் அற்புதமானது”
இதையும் படிங்க : 4வது டெஸ்ட்.. இந்திய அணி டிரா செய்ய முடியுமா?.. கில் ராகுல் சாதிப்பார்களா.. ஆடுகளம் மைதான வரலாறு என்ன சொல்கிறது?
“மேலும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து தற்போது கில் விளையாடி வரும் அணுகுமுறை முற்றிலும் வேறானது. தற்போது அவர் மொத்தத்தையும் மாற்றிக் கொண்டு மிகச் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார். இது குறித்து நாங்கள் அணியில் ஆரம்பத்தில் ஆலோசித்தோம். மேலும் எந்த நேரத்தில் தற்காப்பாகவும், தாக்கியும் விளையாட வேண்டும் என அவர் முடிவு செய்வது மிகச் சிறப்பாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.