ஆசிய கோப்பை இந்திய அணி அறிவிப்பு தாமதம் ஏன்?.. ரோஹித் சர்மா திடீர் எச்சரிக்கை .. வெளியான புதிய தகவல்கள்

0
348
Rohit

2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதற்கான காரணம் வெளியாகியிருக்கிறது.

இன்று ஆகஸ்ட் 19ஆம் தேதி மும்பையில் வைத்து இந்திய தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையில் ஆசியக் கோப்பை இந்திய அணி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து அணி அறிவிப்பு தாமதம் ஆகி வருகிறது.

- Advertisement -

தாமதம் ஏன்?

தற்போது மும்பையில் மழைக்காலம் ஆரம்பித்திருக்கிறது. மேலும் இன்று காலை ஆரம்பித்த மழை மிகவும் தீவிரம் அடைந்து மோசமான நிலையை அடைந்திருக்கிறது. இந்த மழையின் நடுவே பிசிசிஐ தலைமை அலுவலகத்திற்கு இந்திய டி20 கேப்டன் சூரியகுமார் யாதவ் காலை வந்துவிட்டார்.

அதே சமயத்தில் மற்றவர்கள் வருவதற்கு தாமதமாகி வருகிறது. மேலும் பிசிசிஐ செயலாளர் தற்போதுதான் பிசிசிஐ தலைமை அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். இன்னும் அனைவரையும் உள்ளடக்கிய மீட்டிங் ஆரம்பிக்கவில்லை. மோசமான மழையின் காரணமாக தற்பொழுது அணி அறிவிப்பு தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ரோஹித் சர்மா எச்சரிக்கை

இந்த நிலையில் இந்திய முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மும்பையைச் சேர்ந்தவர் என்பதால், அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை வாழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதில் அனைவரும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் வீட்டில் இருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : எனக்கு வாஷிங்டன் சுந்தர் வேண்டாம்.. சிஎஸ்கே பிளேயரும் இருக்க மாட்டார்.. ஆசிய கோப்பை இந்திய அணி இதுதான் – அஸ்வின் கணிப்பு

இதன் மூலம் தற்போது மும்பையில் மழையின் அளவு மோசமான கட்டத்தை எட்டி இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் இன்று ஆசியக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு தொடர்ந்து தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மழை நின்று தேர்வு குழுவினர் மற்றும் பிசிசிஐ அதிகாரிகள் ஒன்று கூடிய பின்னரே அணிய அறிவிப்பு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -