தற்போது அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்திருக்கிறது.
இந்திய அணி அடுத்த மாதம் ஜூன் 20ஆம் தேதி முதல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதைத்தொடர்ந்து தற்போது இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய கேப்டன் மற்றும் துணை கேப்டன்
தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் எதிர்பார்த்ததுபடியே துணை கேப்டனாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதே சமயத்தில் பலரும் எதிர்பார்த்த பும்ரா கேப்டன் பொறுப்புக்கு கொண்டு வரப்படவில்லை. காயமடைவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதால் அவரை தேர்வு செய்யவில்லை.
மேலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், இத்துடன் காயத்திலிருந்து திரும்பி வந்திருக்கும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் தேர்வு செய்யப்படாதது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சாய் சுதர்சன் – கருண் நாயர்
மேலும் அறிவிக்கப்பட்டிருக்கும் 18 பேர் கொண்ட இந்த அணியில் சாய் சுதர்சனுக்கு முதல் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இவருடன் மறு வாய்ப்பு கருண் நாயருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த அணியின் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் இருக்கிறார்கள். மேலும் சுழல் பந்துவீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் இடம்பெற்று இருக்கிறார்கள்.
மேலும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக நிதீஷ் குமார் ரெட்டி சரது தாக்கூருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா , அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆகாஷ் தீப் என ஐந்து பேர் இடம் பெற்று இருக்கிறார்கள். இந்த அணியில் பேட்ஸ்மேன்களாக கேப்டன் கில், ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், கருண் நாயர், கேஎல்.ராகுல், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இதையும் படிங்க : விராட் கோலிய நேத்து பாத்துட்டு இதை ஏத்துகவே முடியல.. 2 வருஷம் வீணா போயிடுச்சு – ஷேவாக் வருத்தம்
இந்திய அணி:
சுப்மன் கில்
ரிஷப் பந்த்
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
கேஎல் ராகுல்
சாய் சுதர்சன்
அபிமன்யு ஈஸ்வரன்
கருண் நாயர்
நிதிஷ் குமார் ரெட்டி
ரவீந்திர ஜடேஜா
துருவ் ஜூரல்
வாஷிங்டன் சுந்தர்
ஷர்துல் தாக்கூர்
ஜஸ்பிரித் பும்ரா
முகமது சிராஜ்
பிரசித் கிருஷ்ணா
ஆகாஷ் தீப்
அர்ஷ்தீப் சிங்
குல்தீப் யாதவ்