92 வருட வரலாற்றில் எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனை.. ஜெய்ஸ்வால் இரட்டை சதம்.. மெகா ரெக்கார்டு

0
1990
Jaiswal

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய இளம் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 319 நாங்கள் எடுத்தது. இதற்கு அடுத்து நேற்று மூன்றாவது நாளில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement -

நேற்றைய நாளின் முடிவில் இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் அடித்து 103 ரன்கள் எடுத்து காயம் காரணமாக வெளியேறினார்.

இன்று தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த அவர் எந்த இடத்தில் விட்டு சென்றாரோ அந்த இடத்திலிருந்து மீண்டும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். வழக்கம்போல் அவரது பேட்டில் இருந்து சிக்ஸர்கள் கொட்டியது.

இன்று நான்காவது நாள் மதிய உணவு இடைவேளைக்கு சென்று வந்து ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரில் ஒரு ரன் எடுத்ததின் மூலம் 150 ரன்களை எட்டி அசத்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 231 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்களுடன் இரட்டை சதத்தை அடித்து பிரமாதப்படுத்தினார்.

இதன் மூலமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் அடித்த மூன்று சதங்களையும் 150 ரன்கள் தாண்டி அடித்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 171, இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக 209, தற்பொழுது இங்கிலாந்துக்கு எதிராக மூன்றாவது டெஸ்டில் 150* என தொடர்ச்சியாக அடித்திருக்கிறார்.

இந்திய அணி தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை 1932 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது. அதிலிருந்து இப்பொழுது வரை எந்த இந்திய பேட்ஸ்மேனும் தன்னுடைய முதல் மூன்று சதங்களை 150 ரன்கள் தாண்டி அடித்ததில்லை.

மேலும் 22 வயதில் 150 ரண்களுக்கு மேல் மூன்று முறை அடித்த முதல் இந்திய வீரராக ஜெய்ஸ்வால் இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் அடுத்த இடத்தில் இரண்டு சதங்களுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.