இந்திய பெண்கள் யு19 கிரிக்கெட் அணி இங்கிலாந்தை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது

0
589
Wwc u19

19 வயது உட்பட்டவர்களுக்கான டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்க நாட்டில் சில வாரங்களாக நடைபெற்று வருகிறது!

இந்த உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியும், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியை மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியும் இறுதிப் போட்டியை எட்டின!

- Advertisement -

இன்று இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷபாலி வர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்திய கேப்டனின் முடிவை இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சரி என்று நிரூபிக்கும் விதமாக அபாரமாக பந்து வீசினார்கள். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ரியானா மெக்டொனால்ட் 19 ரன்கள் எடுத்தார். இந்திய அணியினரின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாத இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சாது, அர்ச்சனா தேவி, பார்சவி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 14 ஓவர்களில் 69 ரண்களை மூன்று விக்கெட் இழப்பிற்கு எடுத்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அண்டர் 19 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்திய அணி தரப்பில் சௌமியா மற்றும் திரிஷா தலா 24 ரன்கள் எடுத்தார்கள்!

- Advertisement -