இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறப்பான சாதனையையும் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் நிலையில் டி20 தொடரை இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் முதலாவது ஒரு நாள் போட்டியில் ஏற்கனவே இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகள் மந்தனா மற்றும் பிரித்திகா ராவல் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்து விட்டு வெளியேற மூன்றாவது வீராங்கனை ஹர்லீன் டியோல் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.
டியோல் 115 ரன், ராவல் 76 ரன், மந்தனா 53 ரன் மற்றும் ஜெமிமா 52 ரன்கள் குவிக்க வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி இலக்காக 358 ரன்கள் இந்திய அணி. இது ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி குவித்த அதிகபட்ச ரன்னாக அமைந்திருக்கிறது. மேலும் இந்த ஆண்டு இந்திய மகளிர் அணி மூன்று முறை 300க்கும் அதிகமான ரன்களை குவித்து சாதனை படைத்திருக்கிறது. கடந்த 2022ஆம் ஆண்டு இரண்டு முறை 300க்கும் அதிகமான ரன்களை குவித்தது.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை ஹீலி மேத்யூஸ் ஒரு புறம் நிலைத்து நின்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த மற்ற வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகளின் விக்கெட்டுகள் சீட்டு கட்டாய் சரிந்தன. இதில் அதிகபட்சமாக சீமன் 38 ரன்கள், ஜேம்ஸ் 25 ரன்கள் மற்றும் பிளக்சர் 22 ரன்கள் குவித்தனர். மறுபுறம் தொடக்க வீராங்கனை மேத்யூஸ் 109 பந்துகளை எதிர் கொண்டு 106 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க:4 முன்னணி வீரர்கள் காயம்.. பாக் டெஸ்ட் தொடர்.. தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு.. 30 வயது வீரர் அறிமுகம்
இருப்பினும் அது வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு கை கொடுக்கவில்லை. இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 46.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 243 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் அதிகபட்சமாக பிரியா மிஸ்ரா மூன்று விக்கட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது.இந்த இரு அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி வருகிறது வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது.