இந்திய கிரிக்கெட்

370 ரன்.. 4 வீராங்கனைகள் மாஸ் ஆட்டம்.. இந்தியா அயர்லாந்து 2வது ஒருநாள்.. மந்தனா அணி அசத்தல் வெற்றி

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் ஏற்கனவே இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது.

- Advertisement -

இதில் அபாரமாக விளையாடிய இந்திய அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 116 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

அயர்லாந்து இந்தியா இரண்டாவது ஒருநாள்

ராஜ்கோட்டில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட்டிங் களம் இறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 18.6 ஓவரில் 156 ரன்கள் குவித்தது. இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை மந்தனா அதிரடியாக விளையாடி 54 பந்துகளை எதிர் கொண்டு 10 போர் மற்றும் இரண்டு சிக்ஸ் என 73 ரன்கள் குவித்தார்.

மற்றொரு தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் 61 பந்துகளை எதிர் கொண்டு 67 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு மூன்றாவது வரிசையில் களமிறங்கிய ஹர்லின் தியோல் மற்றும் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஜெமிமா ஆகியோர் சிறப்பான அடித்தளத்தை அப்படியே மேல் நோக்கி எடுத்துச் சென்றனர். இந்த ஜோடி 168 பந்துகளை எதிர் கொண்டு 183 ரன்கள் குவித்தது. ஹர்லின் டியோல் 84 பந்துகளில் 89 ரன்கள் மற்றும் ஜெமிமா 91 பந்துகளை எதிர் கொண்டு 102 ரன்கள் குவித்து தனது அபார சதத்தை பதிவு செய்தார்.

- Advertisement -

இந்திய வீராங்கனைகள் அபாரம்

இதில் மூன்று வீராங்கனைகள் அரை சதம் மற்றும் ஒரு வீராங்கனை சதம் அடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 370 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி அயர்லாந்து மகளிர் அணி களம் இறங்கியது. அயர்லாந்து அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக மூன்றாவது வரிசை விக்கெட் கீப்பர் வீராங்கனை கால்ட்டர் ரீலி 80 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க:ஆஸி தொடர்ல சிதைஞ்சு போச்சு.. கம்பீர் ரோஹித் ஒற்றுமை இல்லை.. ஆனா இதை நான் நம்புறேன் – ஹர்பஜன் சிங் பேட்டி

அதற்குப் பிறகு பெரிதாக அயர்லாந்து வீராங்கனைகள் யாரும் ரன்கள் அடிக்கவில்லை. இதனால் இறுதியாக அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் மட்டுமே குவித்து 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதலாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதில் சதம் அடித்து சிறப்பாக செயல்பட்ட ஜெமிமா ஆட்ட நாயகியாக அறிவிக்கப்பட்டார். மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வருகிற புதன்கிழமை இதே மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts