டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான அணியை வீழ்த்தியது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி!

0
444
Wt20wc

மகளிர் டி20 உலக கோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று தொடரில் மிக முக்கியப் போட்டியாக இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அத்தோடு கேப்டனான பிஸ்மா மகரூப் அவரே மூன்றாம் இடத்தில் வந்து மிகச் சிறப்பாக விளையாடி 55 பந்துகளில் ஏழு பவுண்டரிகளுடன் 68 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் நின்றார்.

- Advertisement -

இறுதிக்கட்டத்தில் கேப்டன் உடன் இணைந்த ஆயிஷா நசிம் 25 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 81 ரன்கள் சேர்க்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது!

இந்திய அணியில் நட்சத்திர வீராங்கனை மந்தனா இல்லாததால் யாஷிகா பாட்டிகா மற்றும் செபாலி வர்மா இருவரும் களமிறங்கினார்கள். இவர்கள் இருவரும் முறையே 17 மற்றும் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். அடுத்து வந்த கேப்டன் கவுர் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்டரிக்ஸ் மற்றும் ரிச்சா கோஸ் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி 19 ஓவர்களில் இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். ஜெமிமா ரோட்டரிக்ஸ் 38 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார். ரிச்சா கோஸ் 20 பந்துகளில் ஐந்து பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார்!

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி மிக முக்கியமான ஆட்டத்தில் மிகச் சிறப்பாக வெற்றி பெற்று நல்ல துவக்கத்தோடு ஆரம்பித்து இருக்கிறது!